2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கை நோக்கி திரும்புகிறதா?

Super User   / 2011 ஒக்டோபர் 24 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் பிளேக்கின் அண்மைக்கால வருகையின்போது நடந்த பேச்சுவார்த்ததையை தொடர்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாஷிங்டன் செல்லவுள்ளதாக தெரிவிக்கும் தகவல் அரசாங்கத்திலுள்ள அல்லது வெளியிலுள்ள சிங்கள கட்சிகளிமிருந்து பல்வேறுப்பட்ட துலங்கல்களை தோற்றுவிக்கலாம். சிலர் இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச சமூகம் அதாவது மேற்குலகம் கூடுதலாக தலையிடுவதாக தாம் கூறுவதை இது நிரூபிக்கின்றது என கூறுவர். வேறு சிலர் இதை அரசியல் மற்றும் அரசியல் நோக்கம் என்ற வகைகளில் மேற்கத்தைய ஆதரவில் பங்கு கோருவதாக அல்லது போட்டிக்கு வருவதாக நோக்கலாம்.

பனிப்போர் காலத்தின் பின் உலக பொலிஸ்காரானாகவன்றி உலக பாதுகாவலன் என தானே வகுத்துக்கொண்ட பாத்திரத்தின் பின்புலத்துக்கமைய இழுப்பட்டுச் செல்லும் தமிழ் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென கருதும் அமெரிக்காவின் நல்ல நோக்கத்தை தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. அதேசமயம் அமெரிக்கா, இலங்கையில் காணப்படும் விமர்சனங்களை உதாசீனம் செய்யக்கூடாது. அந்த நாட்டில் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளபோது அங்கு காணப்படும் தமிழீழ விடுதலை புலிகளின் எச்ச சொச்சத்தை பெரிதுபடுத்தவும் மாட்டாது.

தன்னைத்தானே நாட்டுக்கு அப்பாலான தமிழீழத்தின் பிரதமர் என கூறிக்கொள்ளும் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் அமெரிக்க பிரஜையாகவும் அங்கேயே வாழ்பவராகவும் இருப்பது முக்கிய கவனத்தை பெறுகின்றது.

மித மிஞ்சிய அமெரிக்க தலையீடாக இதனைப் பார்;ப்பது, போதிய காரணமின்றி இருந்தோருக்கு சீனாவின் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பை கொடுத்துள்ளது.

இன விவகாரத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு, இலங்கையில் கேந்திர முக்கியத்துவத்தில் அமெரிக்க கொண்டுள்ள ஆர்வத்தின் விளைவே என அவர்கள் கருதலாம். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறவுள்ள அமெரிக்காவுக்கு தென்னாசியாவில் காலூன்றி, செயற்பட ஒரு இடம் தேவையாகவுள்ளது என்ற ரீதியில் இதை சிலர் விமர்சிக்கலாம்.

சிங்களவர்களில் அநேகமானோரும், அரசாங்கத்தில் உள்ள சகலரும் உள்நாட்டு பிரச்சினை ஒன்றை சர்வதேச பிரச்சினையாக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்வதாக குற்றம் சாட்டமுடியும். முன்னர் இலங்கையின் அயல்நாடான இந்தியாவிலும் தூரவிருந்த நோர்வேயினாலும் சமாதான செயற்பாட்டை ஒரு கட்டத்திற்கு மேல் நகர்த்த முடியவில்லை.

நழுவல்போக்கு இலங்கை அரசாங்கத்திற்கு மட்டும் உரித்தானதல்ல. அவர்களுக்கு பங்குதாரர்கள்பற்றி போதிய விளக்கமின்றி இருந்தமையும் தேக்கநிலை தோன்றுவதற்கு பங்களித்த காரணியாகும். தமிழர்கள் மிதவாதிகளோ இல்லையோ, தனிப் போக்குள்ளவர்களாகவோ காணப்படுகின்றனர். அவர்களிடம் பிரிவினைகள் உண்டு. இதனால்தான் 1987 ஒப்பந்தத்தில் இந்தியா விளக்கமின்றி இருந்தமையும் தேக்க நிலை தோன்றுவதற்கு பங்களித்த காரணியாகும்.

தமிழர்கள் மிதவாதிகளோ இல்லையோ தனிப்போக்குள்ளவர்களாகNவு காணப்படுகின்றனர். அவர்களிடம் பிரிவினைகள் உண்டு. இதனால்தான் 1987 ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திட வேண்டியேற்பட்டது. இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் பிடிவாதமாக பேசுகின்றனர். சமஷ்டிக் கட்சியின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா காணிப்பதிவு போன்ற குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்கமைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்கமைத்து வருகின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் - ஒரு காலத்தில் அவரது கூட்டாளியாகவிருந்த ஆனந்தசங்கரி, தற்போது செயலிழந்துவிட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (வுருடுகு) யின் பொதுச் செயலாளராக தெரியப்பட்டமை சட்டவலு அற்றது எனக் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலையீட்டுக்கு முன் இந்த முன்னணி ஐக்கியமாக வலுவுள்ளதாக இருந்தபோது சம்பந்தன் இந்த பதவியை வகித்து வந்தார்.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளும் பூரண ஜனநாயகத் தன்மை கொண்டவை என சொல்வதற்கில்லை. இங்கு பரஸ்பர சந்தேகங்களும் கௌர பிரச்சினைகளும் உள்ளன. மாகாணசபை தேர்தல் நடக்கும்போது அது தமிழ் வாக்காளர்களை பிரிப்பதைவிட கூடுதலாக தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிப்பதாக அமையும்.

அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு விஜயம் செய்வதால் அது பற்றிய கணிப்பு உயரலாம். அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுகள், சில சமயம் நடைபெறக் கூடிய சந்திப்பு என்பன உருத்திரகுமாரன் ஆட்களுடனான சந்திப்பு என்பன இலங்கை அரசாங்கம் அல்லது சிங்கள அரசியல் கட்சிகளுக்கு சில செய்திகளை கூறலாம். இலங்கை வாழ் தமிழ் சமுதாயத்துக்கு இது மேலும் முக்கியமான செய்தியாக அமையலாம்.

வெளியுறவு செலாளர் மத்தாயுடன் பேசியபின், இந்தியா ஏதாவது உருப்படியாக செய்யாதுவிடின் இது தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும் என சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் என கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு செல்வதன் நோக்கம் இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தத்தை அதிகாரிப்பதாக இருப்பின் அது இரண்டு விதமாக தாக்கம் விளைவிக்கலாம். ஒருக்கட்டத்துக்கு மேல் உலகளாவிய அழுத்தத்தை எதிர்த்து நிற்கமுடியாது என அரசாங்கம் உணரலாம். அல்லது உலக சமுதாயத்தினால் ஒரு தீர்வை அரசாங்கத்தின் மீது திணிக்க முடியாது என அறியப்படலாம்.

அதாவது குதிரையய நீர் நிலைக்கு கூட்டிச் செல்லாம், ஆனால் வலுக்காட்டாயமாக நீரை குடிக்கச் செய்ய முடியாது என்ற பழமொழியின் உண்மை உணரப்படலாம். இலங்கை தமிழர்களும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் இந்த பழமொழியின் உண்மை பொருந்தும். ஏனெனில் இவர்கள்தான் சிங்கள மக்களுடன் வாழப்போகின்றவர்கள். அமெரிக்கா இலங்கை மீதும் அதன் உள்நாட்டு பிரச்சினைகள் மீதும் அதிக ஈடுபாடு காட்டுவதனால் சீனாவின் இலங்கை மீதான செல்வாக்கு அதிகரிக்கும் என்பதை மறுக்கமுடியாது.

அமெரிக்கா ஒரு பிரச்சினையில் அல்லது ஒரு நாட்டினுள் பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டு நுழையும். ஆனால் எதிர்பார்த்த நிலைமைகள் அமையாதவிடத்து சரியான திட்டமின்றி அவசரமாக வெளியேறிவிடும். இது பல இடங்களிலும் நடந்துள்ளது. இதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
 


You May Also Like

  Comments - 0

  • ummpa Tuesday, 25 October 2011 02:43 PM

    இது கொஞ்சம் நெஞ்சுக்குள் ஒரு இடி இடிக்கிறது . என்னவோ இருந்துதான் பார்ப்போமே மூர்த்தி சார் அவர்களே.

    Reply : 0       0

    fathih Tuesday, 25 October 2011 06:22 PM

    முதல்ல இந்தியா இப்போ அமெரிக்காவா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X