Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 09 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் அமெரிக்க – கனேடிய பயணம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தையில் குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்துவதாக அமையலாம்.
போருக்கு பிந்திய பிரச்சினைகளான புனர்வாழ்வளித்தல், மீள்கட்டுமாணம், நல்லிணக்கம், தமிழர் பகுதியில் இடம்பெறுவதாக கூறப்படும் குடியேற்றத்தை நிறுத்துதல் ஆகியவை தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கொழும்பின் மீது சர்வதேச அழுத்தத்தை பயன்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்திருக்கலாம். ஆனால், அவுஸ்திரேலியாவில் நடந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் நடந்தவை இந்த முயற்சிகளுக்கு சாதகமாக அமையவில்லை எனலாம்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திடமிருந்து எதை எதிர்ப்பார்க்கின்றது என்பதையிட்டு காணப்படும் குழப்பம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதா? இல்லையா? என்பதை சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது. புனர்வாழ்வளித்தல், இன நல்லிணக்கம், குடியேற்றம் என்பவற்றுக்கு மேலாக மனித உரிமை, பொறுப்புக்கூறல் என்றும் பதங்களே பெரிதாகப் பேசப்படுகின்றன.
இலங்கையில் வாழும் தமிழர்கள் முன்னர் கூறிய விடயங்களில் ஆர்வமாக உள்ளபோதும் மேற்கு நாடுகளும் புலம்பெயர் தமிழர் சமூகமும் இவற்றை மறந்து பழிவாங்கும், தண்டிக்கும் முயற்சிகளில் மாத்திரம் கவனமாக உள்ளன. இந்த நிலைப்பாடு இலங்கையில் பாதகமான விளைவுகளை உருவாக்கலாம், அல்லது இவர்களுக்கே திங்கானதாக அமையலாம்.
சர்வதேச சமூகத்தினதும், புலம்பெயர் தமிழ் சமூகத்தினதும் கருத்துக்கள் ஒத்துப்போனாலும் ஒத்துப்போகாவிட்டாலும் ஒரு தரப்பினரைப்பற்றி மறு தரப்பினர் கொண்டுள்ள அபிப்பிராயமே இனிவரும் காலங்களில் அவர்களின் பாதையைத் தீர்மானிக்கும். கடந்த காலங்களில் புலம்பெயர்ந்தோர் உட்பட தமிழ் சமூகத்தின் தீவிரவாத பிரிவினர் வெளியிலிருந்து வரும் ஊக்குவிப்புக்களையே தமது இறுதி நோக்கமாகக் கருதினர்.
தீவிரவாதப் பிரிவினரை வேறுவிதமாக செயற்படும்படி கேட்கும்போது, இவர்கள் தமது பாதையை மாற்ற முடியாதவர்களாக உள்ளனர். இருப்பினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழ் சமூகம் என்பவற்றிலிருந்து சில நல்ல சமிக்ஞைகளை காணக்கூடியதாகவுள்ளது.
தமிழர்களின் தந்திரோபாயம் என்றோ உறுதிப்பாடு என்றோ கூறிக்கொண்டாலும் இந்தியா, நோர்வே, (ஓரளவுக்கு) ஜப்பான் போன் நாடுகள் பட்டுப்பழுத்தே அறிந்துகொண்டன. மிகவும் சாதாரண விடயம் என நினைத்துக்கொண்டு இறங்கும் விடயங்கள் யதார்த்தத்தில் சிக்கலாகும் போது அதற்கேற்ப இவர்கள் நடந்துகொள்ள முடியாமல் போய் மூக்குடைபடுவர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இவர்களுக்கு உண்டான அனுபவம் இத்தகையதே. அப்போது விடுதலைப் புலிகள் யதார்த்தம் புரியாதவர்கள், நியாயம் இல்லாத கோரிக்கைகளை முன் வைப்பவர்கள் என குறை கூறினர். இறுதியான பகுப்பாய்வில், வெளிநாட்டு சக்திகளை தம்மோடு ஒத்துப்போகும்வரை பயன்படுத்தும் தந்திரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறந்து விளங்கினர்.
புலிகளின் செயல்கள் காரணமாக வெறுப்படைந்திருந்த சர்வதேச சமுதாயம் யுத்தத்தில் அரசாங்கத்துக்கு உதவ முன்வந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்த முனையை விட்டு தப்பிப்போனால் அவரை பிடித்துக்கொடுக்க உதவுவதாக அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் கூறியிருந்தது என விக்கிலீக்ஸ் அறிவித்திருந்தது. இது 9/11 இற்குப் பிந்திய அமெரிக்காவின் பயங்கரவாதம் பற்றிய அக்கறையால் மட்டும் உண்டானதல்ல. இது விடுதலைப் புலிகள், புலம்பெயர் சமூகம் என்பவற்றுடன் சர்வதேச சமூகத்துக்கு உண்டான கசப்பான அனுபவத்தின் விளைவுமாகும்.
தற்போது, சர்வதேச சமூகத்தின் திட்டம், புலம்பெயர்ந்தோரின் கடும்போக்காளர்களின் பக்கத்துக்கு இலங்கையிலுள்ள மிதவாதப்போக்கு தமிழர்களை இழுப்பதாகவுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விவகாரங்களில்கூட கடும்போக்காளர்கள் கூடுதலான செல்வாக்கு கொண்டிருப்பது நிதர்சனமாகியுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தால் இவ்வாறாக கடும் போக்காளர்களை உதாசீனம் செய்ய முடியாது. அவ்வாறு செய்வார்களாயின் அது கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவதில் போய் முடியலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மிதவாதிகளுக்கும் கடும் போக்காளர்களுக்கும் இடையில் சமாளித்துப் போவதில் செலவிடும் நேரமும் சக்தியும் தமிழர் நலன்களுக்கு தீங்காகவே அமையும். அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக கொள்கை வேறுபாடு கொண்ட குழுக்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்படன் தம்மை அடையாளப்படுத்த விரும்புவதால் அட்கட்சிப்பூசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
யுத்தம் முடிந்த காலத்திலிருந்து சர்வதேச சமூகம், புலம்பெயர்ந்தோர் ஆகியோருக்கு மட்டுமன்றி, இலங்கையிலுள்ள மிதவாதிகளுக்கும் குழப்பமான சமிக்ஞைகளை கொடுத்துவரும் அரசாங்கம், நல்லிணக்கம் என்பது தொடர்பில் பல கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எவ்வாறு அமையினும் எந்த தரப்பினரும் தொடர்ச்சியான இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளை உதாசீனம் செய்ய முடியாது. நல்லிணக்க முயற்சியானது, இருதரப்பினரம் சந்திக்கக்கூடிய இருவழிப் பாதையாகும். இருப்பினும் இது இரு பக்கமும் கூரான வாளாகவும் ஆகலாம்.
(தமிழில்: ந.கிருஷ்ணராஜா )
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago