2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சமாதானத்தில் பலியானவர்கள்

Super User   / 2011 டிசெம்பர் 03 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அண்மையில் நோர்வே துணிகரமான ஒரு செயலை செய்துள்ளது. தமது நாடு மூன்றாம் நாடு ஒன்றில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் அனுபவம் பற்றிய மதிப்பீட்டை வெளியிடும் அரசாங்கங்கள் அருமையாக உள்ள நிலையில் நோர்வே இலங்கையின் சமாதான செயற்பாட்டில் தனது பாத்திரம் பற்றிய மதிப்பீட்டை கூறிய மாதிரியே வெளியிட்டுள்ளது.

தயக்கத்துடன் இலங்கை நியமித்த கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் இதை ஒப்பிட முடியும். இலங்கை அரசாங்கம் அறிக்கையை வெளியிடுவதாகவும் அதன் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் பலமுறை கூறியிருந்தது. இருப்பினும் இந்த ஒப்பீட்டை இவ்வளவுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இலங்கை நோர்வே போன்று மூன்றாம் நாடு என்ற பாத்திரத்தை வகிக்கவில்லை.

இலங்கையில் தனது தோல்விக்கான பலிக்கடாவை கண்டுபிடித்து நோர்வே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்திருக்குமென யாரும் கருத முடியாது. ஆனால் இந்த அறிக்கை அதனையே செய்துள்ளதுபோல தெரிகிறது.

அறிக்கையின் நம்பகத்தன்மை தொடர்பில் அமைச்சர் சொல்ஹைம் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் செய்யவில்லை. நோர்வேயின் சமாதான முயற்சியின் பிரதான பாத்திரமாக செயற்பட்ட அவர் ஒஸ்லோவில் அறிக்கை வெளியிடப்பட்ட சமயம், 2002 இல் தனது அரசாங்கம் முன்னெடுத்த போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்படுவதற்கு முன்னர் இந்தியாவுக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தைப்பற்றி பேசினார். அவரது உறை மீள்பார்வையாக அன்றி திசை திருப்புவதாகவே இருந்தது.

'சமாதானத்தின் அடமானங்கள்' எனும் இந்த அறிக்கை நோர்வேயின் முயற்சி தோல்வி கண்டமைக்கு அதன் அணுகுமுறை, மனப்பாங்கு என்பன காரணமல்லவெனவும் இலங்கை அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலை புலிகளினதும் விடாப்பிடியான நிலைப்பாடுகளே காரணமெனம் காட்ட முயல்கின்றது.

நோர்வே அனுசரணைக்கு வருவதற்கு பலகாலத்தின் முன்பிருந்த நிலைமை இவ்வாறுதான் காணப்பட்டது. நோர்வேயின் தந்திரோபாயமும் மனப்பாங்கும் இருதரப்பிணையும் தமது நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்க செய்யும் என எதிர்பார்க்கப்ப நோர்வே இந்தியாவின் அனுபவங்களிpலிருந்து கற்றுக்கொள்ள வாய்பிருந்தது.

தமிழீழ விடுதலை புலிகள் சர்வதேசச களத்தில் செயல்படுவது, 9/11க்கு பிந்திய மேற்குலகு அரசாங்கங்களின் மனப்பாங்கு மாற்றத்தின் காரணமாக கடினமாகியிருந்தது. இதுவும் நோர்வேயின் சமாதான செயற்பாட்டுக்கு சாதகமானதே.

கண்டிநேவிய நாட்டினரை கொண்டமைந்த போர் நிறுத்த கண்காணிப்பு குழுவும் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் தோல்வி கண்டது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் அரசாங்கமும் தமிழீழ விடுதலை புலிகளும் பெரும் போர் ஒன்றுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள் என்பதை மூன்று வருடமாக நடந்த ஈழ யுத்தம் - IV எடுத்துக்காட்டியது.

வெற்றியில் பங்கு கோர பலர் வருவர். ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஆட்டங்கண்டு தோல்வி கண்டபோது தோல்விக்கு நோர்வே மட்டுமே பொறுப்பாக்கப்பட்டது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலாகியபோது நன்கொடை வழங்கும் நாடுகளிடம் காணப்பட்ட ஆர்வத்தை நோர்வேயின் சமாதான முயற்சிகள் அடிப்பட்டுபோனபோது காண முடியவில்லை. முடிவு எப்படியிருக்க போகின்றது என்பதை இந்த நர்டுகள் உணரத் தொடங்கியிருந்தன.

இந்த ஆய்வு நோர்வேயின் முயற்சியில் காணப்பட்ட தவறுகளை பக்கம் பக்கமாக விளக்கியிருப்பினும் தோல்விக்கான பொறுப்பு யாருடையது என குறிப்பாக கூறத் தவறியுள்ளது. நோர்வே சமாதான முயற்சி தொடர்பில் அறிவு சார்ந்த தத்துவங்கள் தர்க்கங்களில் தங்கிருந்தது. வேறு நாடுகளின் பெற்ற அனுபவங்களின் அடிப்படையிலான மாதிரிகளை இலங்கையில் அப்படியே பயன்படுத்தியது. இவர்கள் நாட்டுக்கு நாடு வேறுபடும் மனித கலாசாரத்தை வரலாற்று அம்சங்களை சரியாக இனங்காணவில்லை என்பது மட்டுமன்றி இவை காணப்படுவதை அறியாமலும் இருக்கின்றனர்.

ஜனாதிபதி மஹிற்த ராஜபக்ஷ நவம்பர் 2005இல் பதிவியேற்ற பின் இந்த மனிதர் மூன்று வருடங்களில் தமிழீழ விடுதலை புலிகளை தனது முறையில் முடித்துவிடுவார் என்பது தெளிவாக தெரியலாயிற்று. நோர்வே நாட்டு அநுசரணையாளர் இலங்கையில் தமது பார்வைக்கு ஒத்துபோகக் கூடியவர்களுடன் மட்டும் கருத்து பகிர்தல்களை வைத்துக்கொண்டனர். பொருளாதார நெருக்கடி  போன்ற வெளிக்காரணிகள் அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளை தடுத்துவரும் என்ற நம்பிக்கையிலிருந்து மன அமைதியடைந்தனர்.

நோர்வே நாட்டவர்களை பொறுத்தளவில், இந்த ஆய்வு இனி வரும்காலங்களில் சமாதான முயற்சிகளிலும், செயன்முறைகளிலும் வழிகாட்டியாக அமையலாம். இந்தியா, நோர்வே போன்ற நாடுகளின் அனுபவங்கள் ஒரே விதமாக அமைப்பு பின்னணியில் இனிவரும் காலங்களில் இலங்கையில் இவ்வாறான அநுசரணைகளை செய்யக்கூடிய நாடுகளுக்கு, குறிப்பாக தற்போதைய நிலையில் முன்னணிப்பத்திரம் வகிக்கும் அமெரிக்காவுக்கு இது தொடக்கத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X