Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
• றிப்தி அலி
- ஐந்தாவது தொடர் -
கொழும்பு – 10, மருதானையிலுள்ள மேம்பாலத்தில் இரவு 8.30 மணியளவில் ஒரு பெண் தன்னந்தனியாக பயணிப்பதை நம்ப முடியுமா? ஆனால் ஈரானில் இவ்வாறு மறக்க முடியாத ஒரு காட்சியை என்னால் காண முடிந்தது.
ஈரானுக்கான இலங்கை தூதுவர் எம்.எம்.சுஹைரை சந்திப்பதற்காக இலங்கை ஊடகவியலாளர் குழுவினர் சென்ற போதே இச்சம்பவத்தினை காண முடிந்தது.
தெஹ்ரானிலுள்ள வீதியொன்றை கடப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் இரவு 8.30 மணியளவில் பெண்ணொருவர் தன்னந்தனியாக எந்த பயமுமின்றி நடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பில் ஈரானிய நண்பர் ஒருவரிடம் வினவியதற்கு,
எமது நாட்டில் இரவு 10 மணிவரை எந்த பயமுமின்றி பெண்கள் தன்னந்தனியாக வீதிகளில் செல்ல முடியும். இச்சமயத்தில் தேவையற்ற எந்த சம்பவமும் நடைபெற சாத்தியமில்லை என்றார்.
ஈரானுக்கான இலங்கை தூதுவர் எம்.எம்.சுஹைர் கொழும்பை பிறப்பிடமாக கொண்ட சட்டத்தரணியாவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினரான இவர், 1994ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார்.
இலங்கை ரூபவாஹி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றிய பின்னர் ஈரானுக்கான இலங்கை தூதுவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, தெஹ்ரான் நகரில் பயணித்த பெரும்பாலான கார்களின் சாரதிகளாக பெண்களே காணப்பட்டனர். ஆனால் சவூதி அரேபியா உள்ளிட்ட பல அரபு நாடுகளில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் வாகனம் செலுத்தினால் பெண்மை இழக்கும் என சவூதி அரேபிய அறிஞரொருவர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு முஸ்லிம் அறிஞரொருவர் கருத்து வெளியிட்டுள்ள நிலையிலும் பெண்கள் வாகனம் செலுத்துவதற்கு ஈரானிய அரசாங்கம் தடை விதிக்கவில்லை.
ஊடகத்துறையிலும் ஈரானில் பெண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதாவது ஈரானிய ஊடகங்களில் சுமார் 55 வீதம் பெண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இவர்கள்- ஊடகவியலாளர்களாக, புகைப்பட பிடிப்பாளர்களாக, ஒளிப்பதிவாளர்களாக, செம்மையாக்குநரார்களாக, பிரதம ஆசிரியர்களாக, செய்தி வாசிப்பாளராக, தொலைக்காட்சி அளிக்கையாளர்களாகவும் செயற்பட்டனர்.
தெஹ்ரான் இமாம் குமெய்னி முஸல்லாவில் நடைபெற்ற 18ஆவது ஊடக மற்றும் செய்தி சேவைகள் தொடர்பிலான கண்காட்சியில் ஈரானிய ஊடகங்களுக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வினை ஒரு பெண்மணியே தொகுத்து வழங்கினார். இதன்போது குறித்த பெண்மணி பாரசீகம், ஆங்கிலம், அரபு ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியமை வியப்பை உண்டாக்கியது.
இக்கண்காட்சியில் அரசியல், பொருளாதாரம், கலாசாரம், வாழ்க்கை, மனையியல் போன்ற பத்திரிகைள் மற்றும் சஞ்சிகைகளின் காட்சிக்கூடங்களும் அமையப்பெற்றிருந்தன. இவற்றில் பெரும்பாலான கூடங்களில் பெண்களின் பங்குபற்றல் காணப்பட்டதுடன் சிலவற்றில் பெண்கள் மாத்திரமே இருந்தனர்.
இதேவேளை, ஈரானிய பல்கலைக்கழகங்களில் 50 சதவீதம் பெண்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் முகாமைத்துவம், வைத்தியம், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளில் கற்கின்றனர்.
அனைத்து பெண்களும் பல்கலைக்கழகத்துடன் கல்வி செயற்பாட்டினை நிறுத்தி விடாமல் முதுமானி மற்றும் கலாநிதி வரை கற்கைகளை மேற்கொள்கின்றனர்.
கலாநிதி வரை கல்வி நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றோர் மற்றும் கணவர் உள்ளிட்ட அனைத்து குடும்ப அங்கத்தவர்களும் வழங்குவர்.
குறித்த கண்காட்சியில் இலங்கையின் காட்சிகூடத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஈரானிய பல்கலைக்கழக பெண் மாணவர்களே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் தற்போது சுமார் 64 சதவீத பெண்கள் கல்வி கற்கின்றனர். ஆனால் 1979ஆம் ஆண்டு இமாம் குமெய்னியினால் இஸ்லாமிய புரட்சி ஏற்படுத்த முன்னர் 5 சதவீத பெண்களே பல்கலைக்கழக பிரவேசம் என இலங்கைக்கான முன்னாள் ஈரான் தூதுவர் மொஹம்மத் ரஹ்மி ஜேர்ஜ்ஜியை ஈரான் விஜயம் மேற்கொள்ள முன்னர் சந்தித்த போது தெரிவித்தார்.
இந்த கண்காட்சியில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான மொழிபெயர்ப்பாளர்களாக பெண்களே அதிகம் கடமையாற்றினர்.
இவர்கள் ஆங்கிலம், பிரஞ்சு, அரபு, உருது மற்றும் இலத்தீன் உள்ளிட்ட பல மொழிகளில் உரையாற்ற கூடியவர்களாக காணப்பட்டனர்.
'ஈரானில் அனைத்து துறைகளிலும் காணப்படும் பெண்களின் ஆதிக்கத்தினை குறைக்குமாறு ஆண்கள் ஈரானிய அரசாங்கத்திடம் முறையிட்டுள்ளனர் என எமது காட்சிகூடத்திற்கு விஜயம் செய்த ஈரானிய பெண் ஊடவியலாளரொருவர் தெரிவித்தார்.
'எமது அரசாங்கம் ஊடக துறைக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளது. எம்மால் எமது அரசாங்கத்தை விமர்சித்து எழுதவும் முடியும்' என அந்த பெண்மணி குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக ஈரானிய பெண்கள் நாகரீகத்திலும் கூட முன்னேறி காணப்பட்டனர். என்னுடன் ஈரான் விஜயத்தில் கலந்துகொண்டிருந்த சிரேஷ்ட ஊடவியலாளர் எம்.எஸ்.எம்.ஜயூப், கடந்த 16 வருடங்களுக்கு முன்னர் சென்றபோது காணப்பட்ட ஈரானிய பெண்களும் இம்முறை சென்றபோது சந்தித்த பெண்களுக்கும் இடையில் நாகரீகத்தில் பாரிய வேறுபாடு காணப்பட்டதாக குறிப்பிட்டார்.
சுமார் ஒரு வாரம் ஈரானில் தங்கியிருந்த காலத்தில் கண்ட அனைத்து பெண்களும் ஐரோப்பியர்களின் நாகரீகம் போன்ற இஸ்லாமிய ஆடைகளை அணிந்திருந்தனர்.
இதேவேளை, பொலிஸ், செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றிலும் ஈரானிய பெண்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் ஈரானில் பெண்களுக்கொன்று தனியான பொலிஸ் பிரிவும் உண்டு.
பெண் பொலிஸார்:
ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்ட பின்னர் விஞ்ஞான, கலாசார மற்றும் பொருளாதார துறைகளில் பெண்களின் பங்களிப்பை ஆதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதனடிப்படையில், இஸ்லாமிய நிருவாக விதிகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு உதவுதல், பெண்களினால் மேற்கொள்ளப்படும் குற்றங்களை தடுப்பதற்காகவும் பெண்களை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்து கொள்ளவதற்கான சட்ட மூலம் 1998ஆம் ஆண்டு இஸ்லாமிய ஆலோசனை சபை என்று அழைக்கப்படும் ஈரானிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் 1999ஆம் ஆண்டு பெண் பொலிஸாருக்கான கல்வி திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் இளமானி மற்றும் அதனோடு தொடர்புடைய பட்டய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டன.
நாடளாவிய ரீதியில் நடைபெறும் பல்கலைக்கழக அனுமதி பரீட்சை மூலம் பெண் பொலிஸ் சேவையில் இணைய முன்வருவோர் தகுதியான புள்ளிகளை பெற வேண்டும். அதன் பின்னர் நடைபெறும் நேர்முக பரீட்சையிலும் சித்தியடைய வேண்டும்.
இதற்கு மேலதிகமாக முஸ்லிமாக இருக்க வேண்டும், ஈரானியராக இருக்க வேண்டும், அரசியல் கட்சியின் அங்கத்தவராக இருக்க கூடாததுடன் குற்ற செயல்களிலும் ஈடுபட்டிருக்க கூடாது. மற்றும் 17 – 25 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் உள்ளிட்ட தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்.
பெண் பொலிஸ் சேவையில் இணைத்து கொள்ளப்படுபவர்கள் அவர்களின் கல்வி தரத்திற்கு ஏற்றவாறு பொலிஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளப்படுவர்.
11 மாத இளமானி மற்றும் அதனோடு தொடர்புடைய பட்ட கற்கை நெறிகளுக்காக தெரிவு செய்யப்படுவர். குறித்த கற்கை நெறி மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது. முதலாவது பிரிவு மூன்று மாதங்களை கொண்ட அடிப்படை பிரிவாகும். இதனையடுத்து மூன்று மாதங்களை கொண்ட பொது பிரிவாகும். இதன் பின்னர் இறுதி ஐந்து மாதங்கள் விசேட பிரிவாகும். இதன்போது, சாரதி பயிற்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
இந்த கற்கை நெறியினை ஈரான் பெண் பொலிஸ் பயிற்சி நிலையம் வழி நடத்தும். குறித்த கற்கை நெறியினை நிறைவு செய்பவர்களுக்கு மூன்றாவது லெப்டினன் தர பதவி வழங்கப்படும். இதன் பின்னர் தரத்திற்கு ஏற்ற வகையிலான பதவிகளுக்கு நியமிக்கப்படுவர். தொடர்ந்து உயர் கற்கைகளையும் மேற்கொள்ள முடியும்.
பெண் பொலிஸ் கல்லூரி:
ஈரானிய பெண்களுக்கு பொலிஸ் பயிற்சி வழங்குவதற்கான அதியுயர் நிறுவனமே பெண் பொலிஸ் பயிற்சி நிலையமாகும்.
இக்கல்லூரியில் பொலிஸ் கல்வி வகுப்புகள், கணினி பயிற்சி, வரைபட வேலைத்திட்டம், கேட்போலி காட்சி நிலையம், நூலகம் போன்ற பல செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
சுழற்சி முறையில் இந்த பயிற்சிகள் இடம்பெறுகின்றமையினால் தூங்கும் அறை சுய சேவை நிலையம் மற்றும் இணைப்பாட விதான செயற்பாட்டு நிறுவனங்களும் உண்டு.
இதன்கு மேலதிகமாக ஜூடோ, கராத்தே, டெக்வாண்டு, துப்பாக்கி சுடல், நீச்சல் கைப்பந்து மற்றும் பிங் - போங் போன்ற விளையாட்டுக்கான பயிற்சிகளும் வழங்கப்படும்.
ஊடக விருது:
இதேவேளை, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடக அமைப்புக்களினால் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றமைக்கு ஏதிராக ஈரானிய பெண்கள் செய்தி சேவை எனும் ஊடக அமைப்பினை உருவாக்கியுள்ளனர்.
இதற்கிணங்க ஒவ்வொரு வருடமும் சைன (ரழி) அவர்களின் ஞாபகாத்தமாக மனித கண்ணியம் எனும் விருது வழங்கப்படுகின்றது. இந்த விருதிற்கு உலக நாடுகளிலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
இஸ்லாத்தின் நான்காவது கலீபாவான அலி (ரழி) அவர்களின் மகளே சைனப் (ரழி) ஆவார். இவர் தனது சகோதரர்களான ஹசன் மற்றும் ஹுசைன் (ரழி) அவர்கள் கொல்லப்பட்ட பின்னர் மிக துணிச்சலுடன் செயற்பட்டார். இதற்காகவே, சைனப் (ரழி) அவர்களின் ஞாபகார்த்தமாக இந்த விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிமாக இருக்க வேண்டும், ஹிஜாப் பின்பற்றல், சியோனிஸ்டுகளுக்கு ஏதிராக செயற்படல், கஷ்டங்களுக்கு மத்தியில் ஊடகத்தில் கடமையாற்றல் போன்ற நான்கு விதிகளுக்கிணங்க உலக நாடுகளிலிருந்த 100 பெண் ஊடகவியலாளர்கள் பட்டியல் படுத்தப்படுவர். இவற்றிலிருந்து ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்படுவர்.
இந்த அமைப்பினால் உலக பெண் ஊடகவியலாளர் சங்கம் அமைக்கப்பட்டுள்ளதுடன் உலக முழுவதும் உள்ள முஸ்லிம் பெண்களுக்காக சர்வதேச ஊடகத்தை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறான பல திறமைகளை கொண்டுள்ள ஈரான் - பெண்களையும் அந்நாட்டு அரசாங்கத்தையும் அமெரிக்க மற்றும் ஜரோப்பிய ஊடகங்கள் தேவையற்ற முறையில் விமர்சிப்பதாக ஈரானிய பெண்கள் மிக்க வேதனையுடன் தெரிவித்தனர்.
இவற்றுக்கு மேலதிகமாக ஈரானிய அரசியலமைப்பில் மக்களின் உரிமை எனும் மூன்றாவது பகுதியில் 21ஆவது சரத்து பெண்களின் உரிமைகள் தொடர்பிலேயே குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் வட்டியை விரும்பும் ஈரானியர்கள் எனும் தலைப்பில் நிதி நிறுவனங்கள் எனும் உப தலைப்பின் கீழ் ஈரானிய வங்கிகளில் வட்டியுடனான கணக்கு முறை காணப்படுகின்றது என குறிப்பிட்டிருந்தேன். இது ஈரானியர் ஒருவர் தெரிவித்தை அடிப்படையாக கொண்டே எழுதியிருந்தேன்.
எனினும் இது தொடர்பில் ஈரான் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்ற இலங்கையர் ஒருவர் என்னிடம் தொடர்புகொண்டு பின்வரும் தகவல்களை வழங்கினார்.
'ஈரானில் வட்டி என்ற சொல் ஹராம் என்று கருத்தாகும். குறித்த வார்த்தையினை பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானிலுள்ள வங்கிகளை தலை சிறந்த உலமாக்களை கொண்ட ஒரு குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோன்று வங்கிகளில் இலாபம் வழங்கப்படுகின்றதே தவிர ஒரு போதும் வட்டி வழங்கப்படுவதில்லை. குறித்த இலாம் நிலையானதொரு வீதம் அல்ல. மூதலீட்டின் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு ஏற்ப மாதாந்தம் வேறுபடும்' என குறிப்பிட்டார்.
கடந்த ஒக்டோபர் மாதம் ஈரானில் நடைபெற்ற 18ஆவது ஊடக மற்றும் செய்தி சேவைகள் தொடர்பிலான காண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த எனது ஈரான் தொடர்பான அனுபவத்தினை அடுத்தவாரமும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இக்கட்டுரை தொடர்பான உங்கள் விமர்சனங்களை rifthy.ali@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தொடர்புடைய செய்திகள்:
பிச்சைக்காரரில்லா ஈரான்! (தொடர் - 6)
வட்டியை விரும்பும் ஈரானியர்கள் (தொடர் - 4)
ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 3)
ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 2)
ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 1)
jone Thursday, 15 December 2011 06:49 PM
தொடர் 4 விரும்பத்தகாதது, ஆனாலும் தொடர் 5 சிறப்புக்குரியது . அது சரி, எவ்வளவோ நபர்கள் வெளிநாடு சென்று அன்நாடவரின் வாழ்க்கை முறைகளை நன்றாக அறிந்து இருக்கினர், இப்படி ஒவ்வருவரும் கூறினால் ஊடகம் தாங்குமா?
Reply : 0 0
manithan Thursday, 15 December 2011 08:53 PM
ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் சட்டத்தரணி எம். எம். சுஹைர் வெலிகமையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்றல்லவா கூறப்படுகிறது? நீங்கள் அவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவரெனக் கூறுகிறீர்களே.
Reply : 0 0
S.H.M. Fahmi Thursday, 15 December 2011 09:29 PM
இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்று சொல்லும் matra மதத்தவர்களுக்கு இஸ்லாம் பெண்களுக்கு எவ்வளவு உரிமையை வழங்கி இருக்கிறது என்பதை ஈரான் நாடு எடுத்து kaatti இருக்கிறது. இதை பற்றி கட்டுரை எழுதுகின்ற ரிப்தி அலிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
Reply : 0 0
mahan Thursday, 15 December 2011 10:00 PM
மனிதன் அவர்களே,
ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் சட்டத்தரணி எம்.எம்.சுஹையிரை குறித்த பத்தி எழுத்தாளர் நேரடியாக சந்திதுள்ளார். அத்துடன் குறித்த புகைப்படத்திலுள்ள ஏனைய இரண்டு ஊடகவியலாளர்களும் தூதுவரின் நீண்ட நாள் நண்பர்கள்.
இந்நிலையில் குறித்த பத்தி எழுத்தாளர் சொல்வது சரியா? நீங்கள் சொல்வது சரியா? தூதுவர் சுஹைர் கொழும்பு மாளிகாவத்தையை பிறப்பிடமாக கொண்டவர் என நானும் கேள்விப்பட்டுள்ளேன்.
இந்நிலையில் உங்களால் மாத்திரம் எவ்வாறு வெலிகமையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்று கூகற முடியும்? முடியுமானால் ஆதாரங்களுடன் நிரூபியுங்கள்.
Reply : 0 0
hameed Friday, 16 December 2011 03:34 AM
அப்போ ஈரானில் 10 மணிக்கு பிறகு வீதியில் பெனகல் நடமாட முடியாதா? 1௦ மணி வரை என்று தான் குறிப்பிட்டார்.
Reply : 0 0
mabruk Friday, 16 December 2011 10:18 AM
ஒரு அறையினுள் சிந்தித்து எப்படி மிகப்பெரிய இரானின் கலாசாரத்தினை சொல்லுகிறாரோ தெரியாது? அதுமட்டுமல்லாமல், இவரின் பயண அனுபவம் குறைந்தது ஒரு மாதம் மட்டும்தான். எத்தனையோ ஆய்வாளர்கள் வருடக்கணகில் ஆய்வுகள் நடத்திய பின்னர்தான் கருத்தை வெளியிடுகின்றனர். ஆனால் தம்பி ரிப்தி அலி , குறுகியகாலத்தில் எப்படி முடியும்?. இவர் ஈரானுக்கு சென்றதினை சொல்லமலேயே சொல்லுகிறார் போலும்.
Reply : 0 0
pasha Friday, 16 December 2011 02:58 PM
இரானில் பெண்கள் பல்கலைகழகங்களில் அதிகமாக கல்வி கற்பதாக இங்கு கூறபட்டுள்ளது இலங்கை பல்கலைக்கழங்களில் பெண்கள் வீதம் அதிகம்.
Reply : 0 0
ar Friday, 16 December 2011 11:10 PM
இஸ்லாத்திற்கும் (உண்மையான) ஈரானுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? ஈரானியர்கள் - பெரும்பாலும் சீயாக்கள் , நபி பெருமானாரை வெறுப்பவர்கள். இவர்களின் நிலை என்ன என்பதை அல்லாஹ்வே அறிவான். அல்ஹம்துலில்லாஹ்!
Reply : 0 0
mohammed Nizamdeen Monday, 19 December 2011 04:10 PM
உண்மையான இஸ்லாத்திற்கும் ஷீஆக்களுக்கும் தான் நேரடியான தொடர்பு உள்ளது சகோ. ஏஆர் அவர்களே! ஷீஆக்கள் நாயகத்தை வெறுப்பகவர்கள் அல்ல. நூற்றுக்கு நூறு வீதம் நாயகத்தின் சொல்படி வாழ்பவர்களே அவர்கள். இன்றைய உலகில் நாயகத்தை மிகவுவம் நேசிப்பவர்கள் என்றால் அது ஷீஆக்களாகத்தான் இருக்கும். விதண்டாவாதிகளின் கூற்றைக் கேட்டு நடந்து நீங்களும் உங்கள் மறுமை வாழ்வை இருளாக்கி விடாதீர்கள். உண்மையான தகவலை அதன் உரிமையாளர்களிடமிருந்து மாத்திரமே அறிந்து கொள்ள முற்படுங்கள். நன்றி. முஹம்மத்.
Reply : 0 0
mm Monday, 19 December 2011 08:15 PM
தம்பி நிஸாம்தீன், நீங்கள் சொன்னது உண்மை தான். ஒரு விடயத்தைச் சொல்லுமுன் அது பற்றிய உண்மையான தகவலை அறிந்து கொள்ளவேண்டும்.
Reply : 0 0
naazim Thursday, 22 December 2011 03:49 PM
இமாம் கொமைனி செய்தது இஸ்லாமிய புரட்சியா அல்லது சீயா புரட்சியா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago