2025 மே 19, திங்கட்கிழமை

அரசியலில் தமிழீழம் சோஷலிஸம் போன்ற லட்சியங்களுக்கு அர்த்தம் உண்டா?

Kanagaraj   / 2013 ஜூலை 06 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப

 பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் அநாவசியமானவை என்றும் விலைவாசி மற்றும் மின்சார கட்டன உயர்வு போன்ற விடயங்களை மறக்கச் செய்வதற்காகவே அரசாங்கம் இவற்றை சர்ச்சையாக்கி  இருப்பதாகவும் எதிக்கட்சிகள் பல கருதுகின்றன. இதில் உண்மை இல்லாமலும் இல்லை.

அந்த நோக்கத்திற்காக அரசாங்கம் வேண்டுமென்றே இந்த விடயங்களை சர்ச்சையாக்கியது என்று திட்டவட்டமாக கூற முடியாவிட்டாலும் இறுதி விளைவாக நடந்;திருப்பது அது தான். ஆனால், தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை மேலும் பரவலாக்குவதை அரசாங்கத்தின் சில தலைவர்கள் விரும்பாததினாலேயே அது 13ஆவது அரசியலமைப்பு தொடர்பான விடயங்களில் கை வைத்துள்ளது என தமிழ் தலைவர்கள் கருதுகிறார்கள். அதுவும் உண்மை தான்.

ஊடகங்களுக்கு தீனி போடுவது போன்று அரசாங்கம் எடுக்கும் சில நடவடிக்கைகளால் மக்கள் பொருளாதார பிரச்சினைகளை மறக்கும் நிலைமை மேலும் வலுப்பெறுகிறது. அரசாங்கம் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர்களை வட மாகாண சபை தேர்தல் களத்தில் இறக்கப் போவதாக வெளியாகியிருக்கும் செய்திகளை அதற்கு உதாரணமாக சுட்டிக் காட்டலாம்.

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர் புலிகள் இயக்கத்தின் தலைவராக நியமிக்கட்ட கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன், புலிகளின் ஊடக பேச்சாளராக கடமையாற்றிய தயா மாஸ்டர் மற்றும் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் பிரிவின் தலைவி தமிழினி ஆகியோரை அரசாங்கம் அவ்வாறு களமிறக்கப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் அவ்வாறு போட்டியிட்டாலும் அரசாங்கத்தின் வற்புறுத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X