2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுபான்மையினரைத் தேடி வரும் பேரம் பேசும் சக்தி

Thipaan   / 2014 செப்டெம்பர் 28 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண சபைத் தேர்தலானது, வரலாற்றிலேயே மிகவும் வித்தியாசமான தேர்தல் என்று கூறலாம். ஏனெனில், அந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மனணிடைந்து இருக்கிறார்கள். தோல்வியடைந்தவர்கள் மகிழ்ச்சியோடும் உற்சாகமடைந்தும் இருக்கிறார்கள்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் அக்கூட்டமைப்பு பெற்ற வாக்குகளும் வாக்கு வீதமும் ஆசன எண்ணிக்கையும் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின் போது பெற்ற வாக்குகள், வாக்கு வீதம் மற்றும் ஆசனங்கள் ஆகியவற்றை விட வெகுவாக குறைந்து இருப்பதனால் அக்கூட்டமைப்பினர் மனமுடைந்து இருக்கிறார்கள்.
 
ஐக்கிய தேசிய கட்சியினதும் மக்கள் விடுதலை முன்னணியினதும் நிலைமை நேர் வித்தியாசமாக இருக்கிறது. அக்கட்சிகள் கடந்த முறை மாகாண சபைத் தேர்தலின் போது பெற்றதைப் பார்க்கிலும் இம்முறை பெற்ற வாக்குகள், வாக்கு வீதம் மற்றும் ஆசன எண்ணிக்கை ஆகியன வெகுவாக அதிகரித்திருக்கின்றன.

எனவே, அக்கட்சிகள் மகிழ்ச்சியடைவதில் நியாயமிருக்கிறது. பெரும்பாலான சிறுபான்மை மக்களும் அவர்களின் அரசியல் கட்சிகளும் இந்த தேர்தல் முடிவுகளைப் பார்த்து நிச்சயமாக மகிழ்ச்சியடைவார்கள். ஏனெனில், அவர்கள் ஐ.ம.சு.கூவை விரும்பவில்லை.

குறிப்பாக அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் பகிரங்கமாக கூறாவிட்டாலும் இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறது போல் தான் தெரிகிறது.

சிறுபான்மையினர் மகிழ்ச்சியடைவதற்கு மற்றமொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது தாம் கடந்த தேசிய மட்ட தேர்தல்களின் போது இழந்த பேரம் பேசும் சக்தியை அம்மக்கள் பெற்று வருகிறார்கள்.

இனிமேல் ஒருபோதும் நாட்டின் தலைவர்கள் சிறுபான்மை கட்சிகள் மீதும் சிறுபான்மை மக்கள் மீதும் தங்கியிருக்கத் தேவையில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் கடந்த காலத்தில் கூறி வந்தார்கள்.

ஆனால், இப்போது அந்த நிலைமை படிப் படியாக மாறி வருவது தெரிகிறது. 
இந்த தேர்தல் முடிவு ஐ.ம.சு.கூ. அரசாங்கத்தை மக்கள் கைவிட ஆரம்பித்துவிட்டார்கள் என்ற செய்தியை தெளிவாக வழங்கியிருக்கிறது.

இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களின் போதும் இதைக் காணக்கூடியதாக இருந்தது.

அவ்விரு மாகாணங்களிலிருந்தும் ஆளும் கூட்டணி கடந்த முறையை விட ஒரு இஷட்சம் வாக்குகள் வீதம் இழந்திருந்தது. ஆனால், ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் அரசாங்கம் அச்சமடையும் அளவுக்கு இந்த வீழ்ச்சியை எடுத்துக்காட்டியிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐ.தே.க. பதவிக்கு வந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து, எந்தவொரு தேர்தலின் போதும் ஐ.ம.சு.கூ. வடக்கு கிழக்குக்கு வெளியே எந்தவொரு மாவட்டத்திலிருந்தும் எதிர்க்கட்சிகள் பெற்ற வாக்குகளை விட குறைவாக வாக்குகளை பெற்றதில்லை. ஆனால், அது இம்ணிறை ஊவாவில் காணப்பட்டது. பதுளை மாவட்டத்தில் ஐ.ம.சு.கூ. 47 சதவீத வாக்குகளையே பெற்றது.

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், அரச படைகள் பெற்ற வெற்றியின் முழுப் பயனையும் ஐ.ம.சு.கூ.வே பெற்றது.

ரணில் விக்கரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆழ ஊடுருவும் கமாண்டோ படை, போர் நிறுத்த உடன்படிக்கையின் விளைவாக, புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணப் பிரிவு பிளவு பட்டமை, போர் நிறுத்த உடன்படிக்கையில் கடல், கவனத்தில் கொள்ளப்படாததால் அக்காலத்தில் புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டமை, போர் நிறுத்த உடன்படிக்கையின் காரணமாக புலிகளின் நம்பகத்தன்மை சர்வதேச ரீதியாக கேள்விக்குறியாகி இறுதியில் சுமார் 30 நாடுகள் புலிகளை தடை செய்தமை மற்றும் பல நாடுகள் புலிகளுக்கு எதிராக உளவுத் துறையில் அரசாங்கத்துக்கு உதவ முன்வந்தமை ஆகிய காரணங்கள் போர் வெற்றிக்கு ஏதுவாக இருந்த போதிலும் போர் வெற்றியின் பயனை அடைய ஐ.தே.க. தவறிவிட்டது.
 
எனவே, போரின் முடிவுக்குப் பின்னர் அடுத்தடுத்து மாகாண சபைத் தேர்தல்களிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற ஐ.ம.சு.கூ.வால் முடிந்தது.

ஆனால், அந்த அமோக வெற்றியே இம்முறை ஆளும் கட்சி பெற்ற சரிவை மிகப் பெரிதாக எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில், மக்கள் இப்போது போர் வெற்றியை மறந்துவிட்டார்கள்.

அதேவேளை, புதிய வாக்காளர்களுக்கு போரே தெரியாது. அவர்கள் ஐ.தே.க.வையே ஆதரித்துள்ளார்கள்.

ஐ.ம.சு.கூ.வின் இம்முறை சரிவு சிறியதல்ல. கடந்த முறை மாகாண சபைத் தேர்தலின் போது மொனராகலை மாவட்டத்திலிருந்து 81.3 சதவீத வாக்குகளையும் பதுளை மாவட்டத்திலிருந்து 67.79 சதவீத வாக்குகளையும் பெற்ற அம்முன்னணி, இம்முறை மலையக மக்கள் முன்னணியின் உதவியை பெற்றும் அம்மாவட்டங்களிலிருந்து முறையே 58.34 வீத வாக்குகளையும் 47.37 வீத வாக்குகளையுமே பெற்றுள்ளது.

கடந்த ணிறையோடு ஒப்பிடும் போது இம்ணிறை மாகாணத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 418,910 இலிருந்து 613,133 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் ஐ.ம.சு.கூ. பெற்ற வாக்குகள் 69,000களால் குறைந்துள்ளது. அதேவேளை, ஐ.தே.க.வின் வாக்குகள் பதுளையில் மட்டும் சுமார் ஒரு இலட்சத்தால் அதிகரித்துள்ளது.
மாகாணத்தில் சுமார் ஒன்றரை இலட்சத்தால் அதிகரித்துள்ளது. அதாவது ஆளும் கட்சி பழைய வாக்காளர்களில் ஒரு சிலரையும் இழந்து புதிய வாக்காளர்களை கவரவும் தவறியிருக்கிறது.

மக்கள் விடுதலை முன்னணி பதுளையில் தமது வாக்கு வங்கியை இரு மடங்காகவும் மொனராகலையில் மும்மடங்காகவும் அதிகரித்துக் கொண்டுள்ளது.

பதுளையில் அக் கட்சி 2009ஆம் ஆண்டு பெற்ற 9,007 வாக்குகள் இம்முறை 20,625 ஆக அதிகரித்துள்ளது.

மொனராகலையில் அதன் வாக்கு வங்கி 5,632 இலிருந்து 15,955 ஆக அதிகரித்துள்ளது. மலையக தமிழ் மக்கள் தமக்கே வாக்களித்துள்ளார்கள் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கூறியிருந்தார்.

ஐ.தே.க. தமது வருடாந்த மாநாட்டை நடத்திய பசறையில் ஐ.ம.சு.கூ. வெற்றி பெற்றதை அவர் அதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டியிருந்தார். தாம் தோட்டத் தொழிலாளர்களை வென்றெடுக்கத் தவறியதாக ஐ.தே.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோவும் கூறியிருந்தார்.

ஆனால், பசறையில் இருப்பதை விட பதுளை, வெலிமடை மற்றும் ஹாலி எல ஆகிய தொகுதிகளில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக இருக்கின்றன. அத் தொகுதிகளை ஐ.தே.கவே வென்றுள்ளது.

தேயிலைத் தோட்டங்கள் அதிகமாக உள்ள ஊவா பரணகம தொகுதியிலும் ஆளும் கட்சி 197 மேலதிக வாக்குகளையே பெற்றுள்ளது. எனவே ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கனேசன் கூறுவதைப் போல் மலையக மக்கள் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் பிரிந்து வாக்களித்துள்ளார்கள் என்றே ஊகிக்க முடியும்.

ஊவா மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் மத்திய, தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களின் போது போலவே ஆளும் கட்சியை முற்றாக நிராகரித்துள்ளதையே காணக்கூடியதாக இருக்கிறது.

பதுளை, வெலிமடை மற்றும் ஹாலிஎல தொகுதிகளே ஊவா மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தொகுதிகளாகும். மாகாணத்தில் உள்ள 12 தொகுதிகளில் அந்த மூன்று தொகுதிகளை மட்டுமே ஐ.தே.க. வென்றுள்ளது.
அமைச்சர் ரவூப் ஹக்கிமின் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக அமைத்துக் கொண்ட குழு சுமார் 5,000 வாக்குகளையே பதுளை மாவட்டத்தில் இருந்து பெற்றுக் கொண்டது.

அக்குழுவுக்கு ஒரு ஆசனமாவது கிடைக்கவில்லை.
இதுவும் முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் அரச எதிர்ப்பின் வெளிப்பாடே. இக் கட்சிகள் தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சியில் இருக்கப் போவதாக உறுதியாக கூறியிருந்தால் நிச்சயமாக அக் குழு குறைந்தபட்சம் ஓர் ஆசனத்தையாவது பெற்றிருக்கும். இந்தக் குழு பெற்ற வாக்குகளும் அரச சார்பு வாக்குகளாக அமைச்சர் பிரேமசந்திர கருதுகிறார்.

அது முற்றிலும் உண்மையல்ல. இக் குழு போட்டியிடாதிருந்தால் இந்த 5,000 முஸ்லிம் வாக்காளர்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் ஐ.தே.க.வையே ஆதரித்திருப்பார்கள்.

ஏனெனில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பரவி வரும் பிரசாரங்கள் மற்றும் வன்செயல்கள் காரணமாக நேரடியாக ஐ.ம.சு.கூ.வுக்.கு வாக்களிக்க முஸ்லிம்கள் விரும்பவில்லை.

ஆனால், இவ்விரு முஸ்லிம் கட்சிகளும் ஆளும் கட்சியோடு சேர்ந்து இருந்தாலும் அவ்விரு கட்சிகளின் மீதுள்ள பிரிவின் காரணமாகவும் பதுளையில் சில உலமாக்களின் தூண்டுதலின் காரணமாகவும் சிலர் இம் முறை அக் கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள்.

எனவே அக் கட்சிகள் போட்டியிடாத நிலையில் இந்த 5,000 வாக்காளர்கள் அனைவரும் ஆளும் கூட்டணியை ஆதரிக்கப் போவதில்லை.
மொத்தத்தில் முதல் முறையாக மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்ஷhமல் போயுள்ளது.

ஐ.ம.சு.கூ. போனஸ் ஆசனங்களில் ஒன்றையேனும் முஸ்லிம் ஒருவருக்கு வழங்கவும் இல்லை. தமக்கு வாக்களிக்காதவர்களுக்கு ஏன் போனஸ் ஆசனம் வழங்க வேண்டும் என்று அம் முன்னணி நினைத்திருக்கலாம்.

இருப்பினும் மத்திய, தென், மேல் மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களின் போது முஸ்லிம்கள் தமக்கு வழங்கிய செய்தியை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதேவேளை, இத் தேர்தல்களின் போது முஸ்லிம்கள் முஸ்லிம் தலைவர்களுக்கு வழங்கிய செய்தியை அவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மு.கா. பொதுச் செயலாளர் ஹசன் அலி என்றால் அந்தச் செய்தியை விளங்கிக் கொண்டுள்ளார். தாம் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு இருக்கும் வரை முஸ்லிம்கள் தமக்கு வாக்களிப்பதில்லை என அவர் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கூறியிருக்கிறார்.
 
தேர்தலுக்கு சற்று முன்னர் பதுளையில் இருந்து மூன்று ஆசனங்கள் குறைக்கப்பட்டு மொனராகலை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன.

பதுளை மாவட்டத்தில் கூடுதராக சிறுபான்மை மக்கள் வாழ்வதால் அவர்கள் மீது ஆளும் கட்சிக்கு நம்பிக்கை இல்லாததனாலேயே இவ்வாறு பதுளை மாவட்டத்திலிருந்து மூன்று ஆசனங்கள் குறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறின.

உண்மையிலேயே அந்த மாற்றம் இடம்பெறாதிருந்தால் இம் முறை பதுளை மாவட்டத்தில் ஐ.தே.க. பெற்ற ஆசனங்கள் மேலும் ஒன்றால் அதிகரித்திருக்கும்.
ஆளும் கட்சி அச்சமடையக் கூடிய வியடம் என்னவென்றால் முழு மாகாணத்திலிருந்தும் அக் கட்சி 51 வீத வாக்குகளையே பெற்றுள்ளது. ராஜபக்ஷ ஒருவரின் தலைமையில் களத்தில் இறங்கியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முன்னைய மாகாணங்களில் ஈடுபட்டதை விட கூடுதலாக பிரசாரத்தில் ஈடுபட்டும் இந்த நிலை என்றால் அரசாங்கம் அச்சமடைவது நியாயம் தான்.
 
ஏனெனில், இந்தத் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறுமெனக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தலின் போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது. அதில் நியாயம் இல்லாமல் இல்லை. இந்தத் தேர்தலில் ஐ.தே.க. பாய்ந்த பாய்ச்சல் அக் கட்சிக்கு சாதகமாகவும் ஐ.ம.சு.கூ. கண்ட பின்னடைவு அம்முன்னணிக்கு பாதகமாகவும் அமையும்.

ஆனால், அது நாட்டின் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் என்பதற்கு உத்தரவாதம் அல்ல. இந்தத் தேர்தலில் அந்தந்தகக் கட்சிகள் படித்த படிப்பினைகளை அக் கட்சிகள் முறையாக பயன்படுத்தவதிஷேயே ஜனாதிபதித் தேர்தல் முடிவு தங்கியிருக்கிறது.

எதிர்கால ஜனாதிபதித் தேர்தலொன்றின் போது ஐ.ம.சு.கூவுக்கு அரச பலம் என்ற பெரும் ஆயுதம் சாதகமாக இருக்கிறது. ஜனாதிபதியின் ஆளுமையும் அம் முன்னணிக்கு இருக்கும் பெரும் ஆயுதமாகும்.

சிங்கள மக்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு இருந்த ஆதரவு வேகமாக குறைந்து வந்த போதிலும் ஐ.தே.க. அந்த விடயத்தில் ஆளும் கட்சியை எட்டிப் படித்துவிட்டதா என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை.

அதேபோல் ஐ.தே.க.வின் உட்கட்சி மோதல்கள் தொடர்ந்தால் அதுவே அரசாங்கத்தின் மிகப் பெரும் பலமாகவும் அமைந்துவிடும்.

அது தவிர ஆளும் கட்சிக்கு எதிர்கால ஜனாதிபதித் தேர்தலொன்றின் போது பாவிக்கக் கூடிய சாதகமான நிலைமைகள் இல்லை. போர் வெற்றி என்பது இனிமேல் ஆளும் கட்சியின் விற்பனை பொருளாகாது என்பது மத்திய, தென், மேல் மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களின் போது தெளிவாகியது.

தேர்தல் கால சலுகைகள் அரசியல் அலைகள் முன் செல்லுபடியாவதில்லை என்பது ஊவா மாகாண சபைத் தேர்தல் எடுத்துக் காட்டியது. அத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்து மின்சாரக் கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைப்பதாக அறிவித்த போதிலும் ஆளும் கட்சி அந்த தேர்தலில் பெரும் சரிவையே கண்டது.

சிறுபான்மை மக்களில் மலையக தமிழர்களில் சிலர் மட்டுமே ஆளும் கட்சியை ஆதரிக்கிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே முஸ்லிம் மக்கள் ஏற்கனவே ஆளும் கட்சியை புறக்கணித்துவிட்டார்கள்.

 வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் முன்னர் போல் முஸ்லிம்கள் ஆளும் கட்சியை ஆதரிக்கிறார்கள் என்று கூற முடியாது. ஹசன் அலியின் கருத்துப் படி முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்திலிருந்து விலகினால் அரசாங்கத்துக்கான அம் மாகாண முஸ்லிம்களின் ஆதரவும் வெகுவாக குறைந்துவிடும். ஆனால், ஒரு சில முஸ்லிம் அமைச்சர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பார்கள் என்றும் ஊகிக்கலாம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செல்வாக்கின் காரணமாக வடக்கில் தமிழ் மக்களில் மிகச் சிலரும். பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனினதும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் செல்வாக்கின் காரணமாக கிழக்கில் தமிழ் மக்களில் சிலரும் தொடர்ந்தும் அரசாங்கத்தை ஆதரிக்கலாம்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களில் ஏனையவர்கள் ஏற்கெனவே அரசாங்கத்தை புறக்கணித்துவிட்டார்கள். எனவே தற்போதைய நிலையில் வரப் போகும் ஜனாதிபதித் தேர்தலானது கடும் போட்டியாகத் தான் அமையப் போகிறது.  




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X