2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அடுத்த கட்ட போராட்டத்தில், மோடியும் ராகுலும்

Thipaan   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஏறக்குறைய காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமர் நரேந்திரமோடியும் ஒரே காலகட்டத்தில் இந்தியா திரும்பினார்கள்.

காங்கிரஸ் தலைவர் போனது ஓய்வு எடுக்க என்றால், பிரதமர் சென்றது 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்;கு வெளிநாடுகளின் ஆதரவு திரட்டுவதற்கு என்று இரு கட்சிகளும் பரஸ்பரம் செய்தித்தாள்களின் பக்கங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

பிரதமர் நரேந்திரமோடி, டெல்லி திரும்பியதும் முதலில் 20ஆம் திகதி தொடங்கும் இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு தன் கட்சி எம்.பி.க்களை தயார் செய்யும் பணியில் இறங்கினார்.
பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.க்களை சந்தித்துப் பேசிய பிரதமர், 'நம் அரசு குறித்து பொய்களைப் பரப்புகிறார்கள்.

நான் ஏதோ கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அரசாங்கத்தை நடத்துவது போல் பிரசாரம் செய்கிறார்கள். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம், நான் என்ன முகேஷ் அம்பானிக்காகவா கொண்டு வந்தேன். ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கத்தானே.

அதனால் நீங்கள் மக்களிடம் செல்லுங்கள். மக்களிடம் இந்த அரசு ஏழைகளின் அரசு என்பதை எடுத்துரைத்து காங்கிரஸின் பிரசாரத்தை முறியடியுங்கள்' என்று முழக்கமிட்டிருக்கிறார்.

இதற்கு எதிராக டெல்லியில் பிரமாண்டமான விவசாயிகள் பேரணியை நடத்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 'பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு.' என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூட, 'ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நில எடுக்கும் சட்டத்தை பலவீனமாக்கும் நோக்கத்தில் பா.ஜ.க. புதிய சட்டம் கொண்டு வருகிறது' என்று சாடியிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக ராகுல் காந்தி, 'மக்களவை தேர்தல் வெற்றிக்காக மோடிக்கு தொழிலதிபர்கள் உழைத்துள்ளார்கள். அவர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்தவே நிலம் கையகப்படுத்தும் புதிய சட்டத்தை மோடி கொண்டு வருகிறார்.' என்று கூறியிருக்கும் அவர், 'வெளிநாட்டு மண்ணில் நின்று கொண்டு சமீபத்திய வெளிநாட்டுப் பயணத்தின் போது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை குறை கூறியதை எந்த இந்தியப் பிரதமரும் இதுவரை செய்ததில்லை' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மோடியும் ராகுலும் மீண்டும் நேருக்கு நேர் களத்தில் வந்து நிற்கிறார்கள்.

இந்த முறை 'நிலம் கையகப்படுத்தும் புதிய சட்டத்தின்' வடிவில் மோதுகிறார்கள். இந்தச் சட்டம் முதலில் அவசரச் சட்டமாக பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. பிறகு லோக்சபாவில் தங்களுக்கு இருக்கும் பலத்தை வைத்து நிறைவேற்றப்பட்டது.

ஆனால், ராஜ்ய சபையில் பெரும்பான்மை இல்லாததால் அதை நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே போராட்டம் மிக முக்கியக் காரணம்.

அதே போல் காங்கிரஸ் கட்சியும் இதை எதிர்த்தது. பல எதிர்கட்சிகளும் எதிர்த்தன. அதனால் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ராஜ்ய சபையில் நிறைவேற்ற முடியாததால், அந்த மசோதா காலாவதியானது.

விளைவு. இப்போது புதிய நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு விட்டது. இது லோக் சபா மற்றும் ராஜ்ய சபையில் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதற்கு முன்புதான் காங்கிரஸ் கட்சி ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற மாநில விவசாயிகளை ஒன்று திரட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பெரிய கூட்டத்தை நடத்தியிருக்கிறது.

மத்தியில் அமையும் அரசு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிரச்சினையில் செல்வாக்கு குறையும் என்பது இந்திய தேர்தல் வரலாற்றை கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவர் அமல்படுத்திய 'நெருக்கடி நிலைமை பிரகடனம்' பிரச்சினையானது. ராஜீவ் காந்திக்கு போபர்ஸ் ஊழல் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. 'அத்வானி ரத யாத்திரை' வி.பி.சிங்குக்கு தலைவலியாக அமைந்தது.

ராஜீவ் வீட்டை டெல்லி பொலிஸார் வேவு பார்த்தது பிரதமர் சந்திரசேகருக்கு ஆபத்தாக முடிந்தது.
நரசிம்மராவுக்கு 'பாபர் மசூதி இடிப்பு' ஆட்சியின் வீழ்ச்சிக்கு அஸ்திவாரம் அமைத்தது. ராஜீவ் கொலை வழக்கு பற்றி விசாரித்த ஜெயின் கமிஷன் கொடுத்த அறிக்கையால் எழுந்த பிரச்சினை பிரதமர் குஜ்ரால் பதவி போக காரணமாக அமைந்தது.

'ராமர் கோயில் கட்டுவோம்' என்ற இந்துத்துவா அமைப்புகளின் சவால் பிரதமராக இருந்த வாஜ்பாயிக்கு கஷ்ட காலத்தைக் கொடுத்தது. 2-ஜி ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் எல்லாம் பிரதமர் மன்மோகன்சிங் இமேஜைக் கெடுத்தது.

அந்த வரிசையில் 'அடிக்கடி வெளிநாடு செல்வதும்' 'நிலம் கையகப்படுத்தும் மசோதாவும்' இப்போது பிரதமர் நரேந்திரமோடிக்கு தலைவலி கொடுக்கும் பிரச்சினைகள்.

அதற்கு இணையாக நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியிருப்பது போல் இந்தியாவில் நடைபெற்ற 'தேவாலயங்களின் மீதான தாக்குதல்இ 'இந்துத்துவா அமைப்புகள் தங்கள் கொள்கையை நிலை நாட்ட எடுக்கும் முயற்சிகள்' பிரதமர் நரேந்திரமோடிக்கு பெரும் சவாலாக இன்றைக்கு இருக்கின்றன.

என்னதான் 'என் அரசு ஏழைகளின் அரசு' 'எனக்கு வளர்ச்சிதான் முக்கியம்' என்றெல்லாம் பிரதமர் நரேந்திரமோடி தினமும் பேசினாலும், அவற்றை இந்துத்துவா அமைப்புகள் காதில் போட்டுக் கொள்ளத் தயாராக இல்லை. அதே போல் சில பா.ஜ.க. எம்.பி.க்களும் இது பற்றி கவலைப்பட முன் வரவில்லை.
இதுவரை பதவிக்கு வந்த எந்த இந்தியப் பிரதமரும் ஆட்சிக்கு வந்த 11 மாதங்களில் இப்படியொரு சோதனையைச் சந்தித்தது இல்லை.
ஆனால், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காங்கிரஸுக்கு மக்கள் செல்வாக்கு இன்னும் திரும்பவில்லை என்பது மட்டுமே இப்போதைக்கு பிரதமர் நரேந்திரமோடிக்கும் சரி, அவர் தலைமையேற்றும் நடத்தும் பா.ஜ.க.வுக்கும் சரி ஆறுதலான விஷயம்.
ஆனால், அதில் கூட இனியும் தேர்தல் பிரசாரம் போன்ற மேடைப் பேச்சுகளை பா.ஜ.க.வின் மற்ற தலைவர்களிடம் ஒப்படைத்து விட்டு, பிரதமர் நரேந்திரமோடி அவர் வாக்குறுதியளித்த புதிய நிர்வாகம், சிக்கனமான நிர்வாகம், நல்ல நிர்வாகம் என்ற திசையில் பயணிக்க வேண்டும் என்பதே இந்திய மக்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.
அதற்கான பாதை தெரியாமல் இல்லை. பதினோரு மாத கால ஆட்சியில் அந்தப் பாதையில் செல்வதற்கு பிரதமர் நரேந்திரமோடியின் ஆர்வம் தெரிகிறது.

ஆனால், திட்டக் கமிஷன் கலைப்பு, பல சட்டங்கள் ரத்து, ரிசர்வ் வங்கி கவர்னருக்கும்- அரசுக்கும் உள்ள மோதல்கள், நீதித்துறையில் கொண்டு வரப்பட்டுள்ள 'தேசிய நீதித்துறை நியமன ஆணையம்' போன்ற பல விஷயங்கள் வேறு செய்தியை நாட்டு மக்களுக்குச் சொல்லுகிறது.

இதே போல் கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதில் தேர்தல் நேரத்தில் இருந்த ஆர்வம் இப்போது அறிக்கை வடிவில் மட்டுமே இருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.

ஊழல் ஒழிப்பில் தேர்தலுக்கு முன்பு இருந்த வேகம் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க. தலைமையிடம் இல்லை என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் இருப்பது பிரதமர் மோடியின் 'இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்' என்று காட்டும் ஆர்வம் மட்டுமே! அது செயல்வடிவம் பெறுவதற்குள் விவசாயிகள் பிரச்சினை, மைனாரிட்டிகள் பிரச்சினை, இந்துத்துவா அமைப்புகளின் பிரச்சினை என்று பல சோதனைகள் தோரணம் கட்டி நிற்கின்றன.

இதைத்தான் காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. அதன் முதற்கட்டம்தான் விவசாயிகளை டெல்லியில் திரட்டி கூட்டப்பட்ட கூட்டம்.

காங்கிரஸின் இந்த முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சியில் மாற்றம் உருவாகியிருக்கிறது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சீத்தாராம் எச்சூரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்பு இப்பதவியிலிருந்த பிரகாஷ் காரத் 'காங்கிரஸ் எதிர்ப்பில்' ஊறிப் போனவர். ஆனால் சீத்தாராம் எச்சூரி அப்படிப்பட்டவர் அல்ல. எதிர்கட்சிகளை ஓரணியில் கொண்டு வரும் ஆற்றல் படைத்தவர்.

சமீபத்தில் குடியரசு தலைவர் உரைக்கு திருத்தம் கொண்டு வந்து, அதை காங்கிரஸ் போன்ற கட்சியின் ஆதரவுடன் ராஜ்ய சபையில் தீர்மானமாகக் கொண்டு வந்து நிறைவேற்றி, பிரதமர் மோடிக்கு தர்மசங்கடத்தை கொடுத்தவர்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுடன் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கைகோர்த்து செயல்படுவதில் பிரகாஷ் காரத்துக்கு இருந்த தயக்கம் சீத்தாராம் எச்சூரிக்கு இருக்காது என்றே தெரிகிறது.

அதனால்தான் அவர் பதவி ஏற்றுக் கொண்டவுடனேயே, 'திரிசூலம் (பா.ஜ.க.வின் துணை அமைப்புகளான இந்துத்துவா அமைப்புகளுக்கு மறைமுக பெயர்) இந்த நாட்டின் இதயத்தைக் கிழித்து விடாமல் பாதுகாப்பேன்' என்று முரசு கொட்டியிருக்கிறார்.

அதிலிருந்தே 'பா.ஜ.க. எதிர்ப்பு' என்பதற்காக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எல்லா எதிர்கட்சிகளுடனும் ஐக்கியமாக பணியாற்றும் என்பது தெளிவாகியிருக்கிறது.

ஆகவே நடைபெறும் இந்திய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் புதிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஓய்வுக்குப் பிறகு வந்துள்ள ராகுல் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி என்று 'புதிய தெம்புடன்' இருக்கும் எதிர்கட்சிகளை சந்திக்க வேண்டிய சூழலில் பிரதமர் நரேந்திரமோடி இருக்கிறார்.

அதனால்தான் 'இது ஏழைகளுக்கான அரசு' என்று நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பு பிரதமர் பேசியிருக்கிறார்.

அதன் செயல்வடிவம் பார்த்துத்தான் அடுத்த கட்ட அரசியல் கூட்டணியில் யார் யார் பா.ஜ.க.வுடன் இருக்கப் போகிறார்கள், எப்படி அடுத்த கட்டமாக ஆட்சி நிர்வாகத்தை பா.ஜ.க. நடத்தப் போகிறது,
அதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்ல, உள்நாட்டு பிரச்சினைகளையும் சமாளிக்கப் போகிறது என்பது தெரியவரும்.

ஆக  மொத்தம் கரை சேர முடியும் என்ற நம்பிக்கை காங்கிரஸுக்கு இப்போது பிறந்திருக்கிறது. செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம் ஆளும் பா.ஜ.க.வினருக்கே தோன்றியிருக்கிறது!

You May Also Like

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .