Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 01 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
றம்ஸி குத்தூஸ்
உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் covid-19 வைரஸ் கறுப்பு, வெள்ளையென்றும் பார்க்காமல்,இன மதபேதமின்றியும் சிறுவர், முதியோரென்றும் பார்க்காமல்
தாக்கிக் கொண்டிருக்கும் இந்த ஈவிரக்கமற்ற வைரஸ் எப்போது இவ்வுலகை விட்டுப்போகுதென்பது தான் உலகத்தார் அனைவரதும் எதிர்பார்ப்பதாகும்.
இவ்வுலகிலுள்ள பெரும்பான்மை உயிரியல் விஞ்ஞானிகள் இன்று இதற்கு எதிரான கிருமியைக் கண்டுபிடிப்பதற்கு பல்வேறு பிரயத்தனங்களைப் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால்,முடியாமல்தான் இருக்கிறது.
இந்தக் கொவிட்-19 கிருமி, ஏழையானவன் பணக்காரன், பதவியில் உயர்ந்தவன் என்ற பாகுபாடுஇன்றி அனைவரையும் அணுகியுள்ளது. போராடிக்கொண்டிருக்கும் இந்த பாரிய
மைதானத்தில் சுமார் 39ஆயிரம் உயிர்கள் பலி கொண்டிருக்கும் இந்நிலையில் இன்னும் எத்தனை உயிர்கள் தான் பலிபோகுமென்பதுதான் இன்றைய அடுத்த கேள்வி? உலகத்தை ஆட்டிப் படைத்த இராட்சத நாடுகளான
அமெரிக்கா,சீனா,இத்தாலி, பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளும் கிழக்காசிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் இதில் பலியாகிக் கொண்டிருக்கின்றன.
இதேவேளை, உலக நாடுகள் இந்த கொவிட்-19 வைரஸின் தாக்கத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளை, சில நாடுகளில்
யுத்தமும் இடம்பெறுகின்ற போதும், வடகொரியா அணு உற்பத்தியை பெருக்கிக் கொண்டுபோவதை அறியவும் முடிகிறது.
இவ்வாறான நாடுகள் பொறுப்பற்ற விதத்தில் நடந்தகொள்வதால் உலகை அழிக்கும் இலக்குக்குத்தான் செல்லகின்றன.
இன்று உலகம் முடங்கிக் காணப்படுவதால் வளிமண்டலம் மிகவும் தூய்மையாக காணப்படு வதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. துகள், உயிரியற் பொருள்கள் வளிமண்டலத்தில் கலந்து காற்றை மாசுபடுத்தியது. தற்பொழுது அது குறைந்துள்ளது.
இதற்கு காரணம் உலக முடக்கம். காற்று மாசுபடுவதால் நோய்கள், ஒவ்வாமை ஏற்படலாம். ஆனால், தற்போது என்ன இடம்பெற்றுள்ளது.கொவிட்-19 உலகை ஆக்கிரமித் துள்ளது.
மனித சமுதாயத்துக்கு மட்டுமன்றி, விலங்குகள் தாவரங்கள் போன்ற உயிரினங்களும் வளிமண்டல மாசினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
இயற்கையான சுற்றுச் சூழலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட வாழிடங்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன.
பெற்றோலைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்குதல், மக்கள் தொகைப் பெருக்கம், மரங்கள் அழிப்பு, அணுகுண்டு தாக்குதல் போன்ற மனித
நடவடிக்கைகளும், எரிமலை வெடிப்பு, கதிரியக்கம், துகள்கள் மற்றும் தூசு போன்ற இயற்கை நடவடிக்கைகளும் காற்று மாசுபடுதலுக்கு காரணங்களாகின்றன.
இவற்றையெல்லாம் சற்று யோசித்துப்பார்த்தால் மனிதனின் சிந்தனை எங்குதான் சென்றுவிட்டது? சீனாவில் வூஹான் மாநிலம் முடக்கப்பட்டதும்,
இவை அனைத்தும் இவ்வாறு இருக்க, தூய்மையான பூமியை இலக்காகக் கொண்டு இயங்கும் ‘பிளாக்சுமித் நிறுவனம்’ 2008 ஆம் ஆண்டு ஒரு பட்டியலை வெளியிட்டது.
உலகின் மிக மோசமான நச்சு மாசுபாடுகள் என்ற இப்பட்டியலில் உட்புற காற்று மாசுபாடும் மோசமான நகர்ப்புற காற்று தரமும் இடம்பெற்று ள்ளன.
2014 உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, 2012 இல் ஏற்பட்ட காற்று மாசுபாடு காரணமாக உலகெங்கிலும் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் கார்பன் வாயுவை அதிக அளவு வெளியேற்றும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது.
இவர்கள் தான் கொவிட்-19 உரிமையாளர்கள். இவர்களின் சிறுபிள்ளை விளையாட்டால்தான் உலகமே இன்று முடங்கிக் காணப்படுகின்றது.
குறிப்பாக, சீனத் தலைநகர் பீஜிங், உலகில் அதிக காற்று மாசு உள்ள நகரம் என்ற பெயரையும் பெற்றுள்ளதென்றால் யாரிடம் நாம் தான் பேசுவது.வல்லரசுகளான
அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் நான் உன்னைவிடப் பெரிது எனும் குருட்டு விளையாட்டில் அப்பாவிகள் செத்து மடிகின்றார்கள்.
அமெரிக்க ‘ஜனாதிபதிக்கு கொவிட்-19 தொற்று தாவியதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி பின்னர் மறுக்கப்பட்டது. இதுபற்றியும் யாருக்குத்தான் தெரியும்.
கடந்த 2013ஆம் ஆண்டு குன்காய் மாகாணத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.
இதனால் எவ்வாறான வளிமாசு இடம்பெறும் என்பதை சிறுபிள்ளை கூட சொல்லும்.சீனத்தலைவர்கள் இன்னுமா யோசனையில்லாமல் துங்குகின்றனர்.
அமெரிக்காவில் கொவிட்-19னால், உயிரிழப்ப வர்களின் எண்ணிக்கை உச்சநிலையை எட்டலாமெனத் தெரிவித்த தொற்றுநோயியல் நிபுணர்,
இந்தக் காலப்பகுதிக்குள் அனேகமான பாதிப்புகள் இடம் பெற்றிருக்கும் என அமெரிக்காவின் பிரபல தொற்று நோயியல் நிபுணர் ஐரா லொங்கினி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் அமெரிக்காவில் உயிரிழப்ப வர்களில் எண்ணிக்கை உயர்நிலையை அடையும் என தெரிவித்துள்ள அவர் மேலும், இரண்டு மூன்று நாள்களில் இரட்டிப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வேறு இரு நிபுணர்களும் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வன்டெர்பிட் பல்கலைகழகத்தின் தொற்றுநோய் நிபுணர் வில்வியம் ஸ்காவ்வெனர் அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் உயிரிழப்பு உச்சநிலையை அடை யும் என அவர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் அரண்மனை ஊழியர்கள் ஏழு பேருக்கு கொவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மலேசியா மன்னர் மற்றும் ராணி தனிமைப்படுத்தப்ப ட்டுள்ளனர்.
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு எவ்வாறு இது ஏற்பட்டது என மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதில், அவர்கள் இருவருக்கும் கொவிட்-19 வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து 14 நாள்கள் தனிமைப்படுத்தப்ப ட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் அங்கிருக்கும் அரண்மனை ஊழியர்களுக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
16 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago