2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜம்மு-காஷ்மீரை மறுசீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை

Editorial   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், 370 மற்றும் 35 ஏ சட்டத்தை 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி  இரத்துச்செய்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. உடனடி முடிவுகள், இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து 890 முக்கியமான மத்திய சட்டங்களையும் கையகப்படுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தலாகும்.

370 பிரிவு நீக்கம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் காணப்படுகின்றன. ஆனாலும் சட்டம் நீக்கப்பட்டு, மத்திய அரசின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் என்பன இதற்கு முன்னர் எப்போதும் இல்லாதவகையில்  வலுவான நிலையை அடைந்திருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.

இம்மாதம் ஓகஸ்ட் 5ஆம் திகதியுடன் இப்பிரிவு நீக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவுக்கு வரும் நிலையில் அண்மைய காலங்களில்  முன்னேற்றகரமான செயல்கள் நடைபெற்றுள்ளனவா என்பதுபற்றி கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

அத்துடன், அங்குள்ள சவால்கள் குறித்தும் அவதானம் செலுத்தவேண்டியுள்ளது. எதிர்காலத்துக்கான நம்பிக்கைக்குரிய அடையாளமாக, வன்முறைகள் குறைவு மற்றும் முன்னேற்றம் என்பன காணப்படுகின்றன.

இந்த அறிக்கையானது, ஜம்மு காஷ்மீரின் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்களை பிரதிபலிக்கிறது.

பொருளாதார முயற்சிகள்:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  கடந்த மார்ச் 17ஆம் திகதியன்று, ஜம்மு காஷ்மீருக்கான 108,621 கோடி ரூபாய் செலவுத் தொகைகொண்ட வரவு செலவு திட்டத்தை வெளியிட்டார். அதில் 38,817 கோடி ரூபாய் மூலதன செலவினங்களுக்காகவுமாக 68, 804 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  

ஒதுக்கப்பட்டுள்ள நிதியில 37 சதவீதம் அபிவிருத்திக்கு செலவிடப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் முதல் தடவையாக மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கும் தொகுதி மேம்பாட்டு சபைகளுக்கும் அபிவிருத்தி நிதி ஒதுக்கியிருக்கிறது.

வரவு செலவு திட்ட ஆவணப்படி, ஒவ்வொரு சபைக்கும் 10 கோடி ரூபாய் என்னும் அடிப்படையில், மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. அதேபோல 285 தொகுதி மேம்பாட்டு சபைளுக்கு 71.25 கோடி ரூபாய் அபிவிருத்தி நிதி வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தவகையில் ஒவ்வொரு தொகுதி மேம்பாட்டு சபையும் அபிருத்தி நோக்கங்களுக்காக 25 இலட்சம் ரூபாய் பெறும்.

மாவட்ட அபிவிருத்தி சபை மற்றும் தொகுதி மேம்பாட்டு சபை அலுவலகங்களை அமைப்பதற்கு 30 கோடி ரூபாயை செலவிடவும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

ஆப்பிள், வால்நட், செர்ரி, பெரி என்பவற்றின் அதிக அடர்த்தி கொண்ட தோட்டங்கள், விவசாயிகளின் வருமானத்தை 3-4 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள்களின் அதிக அடர்த்தி கொண்ட தோட்டங்கள், கிஷ்ட்வார் மற்றும் படேர்வாவில் செய்யப்படும்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு, ஒரு தனியார் விமான நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இளைஞர் முயற்சிகள்:

இளைஞர்களுக்கு பயனளிப்பதற்கும் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கும் அரசு முயற்சிகள்  எடுத்து வருகிறது.

ஜம்மு -காஷ்மீர் விளையாட்டு திறமைகளின் சக்தி மையமாக இருக்கும்.

வளர்ச்சியூட்டும் விளையாட்டு கலாசாரத்தை உருவாக்குவதிலும், வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு சரியான தளங்களை வழங்குவதிலும் மற்றும் இளம் விளையாட்டு திறமைகளின் திறனை வளர்ப்பதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் தேவையான கட்டமைப்புகளையும் வழங்குவதில் நிர்வாகம் விடாமுயற்சியுடன் செயல்படும்.

பாதுகாப்பு முயற்சிகள்:

காஷ்மீர் பள்ளத்தாக்கின் 67 இளைஞர்கள் மட்டுமே மூளைச்சலவை செய்யப்பட்டு இந்தியாவுக்கு எதிராக துப்பாக்கிகளை எடுக்கச் செய்யப்பட்டதால், பயங்கரவாத அமைப்புகளில் உள்ளூர் இளைஞர்களின் ஈடுபாடு 40சதவீதம் குறைந்துள்ளது.

ஓகஸ்ட் 5ஆம் திகதிக்குப் பின்னர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறைச் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன, பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பாதுகாப்புப் படைகள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

உட்கட்டமைப்பு முயற்சி:

பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 2021 நடுப்பகுதியிலிருந்து 2025 வரை 272 கிலோ மீற்றர் நீளமுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இரயில்வே பாதையை நிர்ணயித்தார். 28,000 கோடி ரூபாய் மதிப்பு மெகா திட்டம் நாட்டின் மற்ற பகுதிகளுடன் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் சேரும்.

ஜம்மு-காஷ்மீர் அரசு, ஸ்ரீநகரில் உள்ள 19 ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கான சுற்றுச்சூழல் செயல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய அரசு, ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தில் உள்ள அனைத்து அதிகார வெற்றிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது பிராந்தியத்துக்கு அப்பால் ஒரு சிற்றலை விளைவை உருவாக்குகிறது. இதன் தாக்கம் காஷ்மீர் மக்களின் ஆன்மாவை அடைய எப்போதும் வாய்ப்பு உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .