Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜூலை 15 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு முன்பு எத்தனை அமெரிக்க ஜனாதிபதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. டிரம்ப் மீது இந்த தாக்குதல் நடத்தியவரை பொலிஸார் சுட்டுக் கொன்றுவிட்டனர். இதுதொடர்பான விசாரணை அங்கு அனல் பறந்து வருகிறது.
உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும், அமெரிக்காவில் ஜனாதிபதிகளும், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களும் சுட்டுக் கொல்லப்படுவதும், அவர்களை கொல்ல முயற்சி நடைபெறுவதும் புதிது ஒன்றும் கிடையாது. அமெரிக்காவின் அத்தகைய ரத்தக்கறை படிந்த சில வரலாறுகளை இங்கு பார்க்கலாம்.
காலம் காலமாக உலக வல்லரசாக திகழ்ந்து வரும் அமெரிக்காவில் ஜனாதிபதி ஒருவர் முதன்முதலில் கொலை செய்யப்பட்டது 1865-ம் ஆண்டில் தான். சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்து, பின்னர் அமெரிக்காவுக்கே ஜனாதிபதியாக மாறி வரலாறு படைத்த ஆபிரகாம் லிங்கன், 1865-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் திகதி ஜான் வில்கீஸ் பூத் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன் பிறகு, அமெரிக்காவின் 20-வது ஜனாதிபதியாக பதவியேற்ற ஜேம்ஸ் ஏ. கார்பீல்ட் 1881 ஜூலை 2-ம் திகதி சார்லஸ் என்பவனால் வாஷிங்டன் ரயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, அமெரிக்காவின் 25-வது ஜனாதிபதியாக பதவியேற்ற வில்லியம் மெக்கின்லி 1901-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு, அமெரிக்காவின் 32-வது ஜனாதிபதியாக இருந்த ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் 1933-ம் ஆண்டு பிப்ரவரியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அதுபோல அமெரிக்காவின் 33-வது ஜனாதிபதியாக இருந்த ஹாரி எஸ். ட்ரூமேன் 1950-ம் ஆண்டு வெள்ளை மாளிகையிலேயே மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, உலக புகழ்பெற்ற அமெரிக்காவின் 35-வது ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி 1963-ம் ஆண்டு நவம்பரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஜான் கென்னடியின் மரணத்தை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டன. அதனால் அதன் பிறகு அமெரிக்க ஜனாதிபதிகள் தாக்குதல் மூலம் உயிரிழக்கவில்லை.
இருந்தபோதிலும், அமெரிக்காவின் 38-வது ஜனாதிபதியான ஜெரால்ட் ஃபோர்டு மீது 1975-ம் ஆண்டு இரண்டு முறை கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றது. ஆனால் அந்த தாக்குதல்களில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அதேபோல, 40-வது ஜனாதிபதியான ரொனால்ட் ரீகன் மீது 1981-இல் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக ஜனாதிபதி ரீகன் உயிர் தப்பினாலும் மூத்த அரசு அதிகாரிகள் இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில், 2005-ம் ஆண்டு 43-வது ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ் மீது ஜார்ஜியாவில் மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த குண்டுகள் வெடிக்காததால் நூலிழையில் உயிர் தப்பினார் ஜோர்ஜ் புஷ். (நன்றி தி ஹிந்து)
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago