Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 நவம்பர் 19 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்காக இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் - நடராஜன்
இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டபோது புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தாதது ஏன் என்பது தொடர்பாக இலங்கைக்காக இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் நடராஜன் இதுவரை வெளியாகாத தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்தியத் துணை தூதராக 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் ஏ.நடராஜன். From the Village to the Global Stage என்ற தலைப்பில் புதிய புத்தகம் ஒன்றை ஏ.நடராஜன் எழுதி உள்ளார்.
இந்தப் புத்தகம் விரைவில் கோவையில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் புத்தகத்தில் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்தப் புத்தகத்தில் ஏ.நடராஜன் எழுதியிருப்பதாவது,
பிரதமர் மோடியின் யாழ்ப்பாணம் பயணத்தின் போது நல்லூர் கோவில் அல்லது மாவிட்டாபுரம் கந்தசாமி கோவில் அல்லது காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது.
இது தொடர்பாக நல்லூர் கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி குமாரதாச மாப்பன முதலியாருடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது. அப்போது, கோவிலுக்குள் மேலாடை அணியாமல்தான் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில்தான் கோவில் நடை திறக்கப்படும் என்கிற மரபுகளில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என நல்லூர் தேவஸ்தான அதிகாரி திட்டவட்டமாகக் கூறிவிட்டாராம். இதனால் நல்லூர் முருகன் கோவிலுக்குப் பிரதமர் மோடியால் செல்ல முடியவில்லை.
ஆனால், காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அப்போது 98 வயதான நகுலேஸ் குருக்கள் உடனிருந்தார். தற்போது அவர் காலமாகிவிட்டார். இவ்வாறு ஏ.நடராஜன் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13,14ஆம் திகதிகளில் பயணம் மேற்கொண்டார்.
அரசு முறை பயணமாக 27 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி. 1987ஆம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை சென்றார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. அந்த பயணத்தின் போது இலங்கை கடற்படை வீரர் ஒருவரால் ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. 2008இல் சார்க் மாநாட்டில் பங்கேற்க அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் சென்றிருந்தார்.
ஆனால், அது இலங்கைக்கான தனிப்பட்ட அரசு முறை பயணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் காந்திக்குப்பிறகான காலகட்டத்தில் இந்தியப் பிரதமர்கள் சிலர் இலங்கைக்கு சென்றிருந்தாலும் இலங்கைக்கான தனிப்பட்ட அரசுமுறைப்பயணமாக அவை அமைந்திருக்கவில்லை. மாறாக, இலங்கையில் நடந்த சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்வதற்கான பயணங்களாகவே அவை அமைந்திருந்தன.
2008ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்துகொண்டு சார்க் அமைப்பின் தலைமைப்பொறுப்பை அப்போதைய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கையளித்தார். அதேசமயம் 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவில்லை.
இந்தியா இலங்கைக்கு இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்களும் அப்போது கையெழுத்திடப்பட்டன.
மேலும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியை இலங்கைக்கு வரும்படி மைத்ரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக இந்திய தரப்பிலும் அப்போதே தெரிவிக்கப்பட்டிருந்த பின்னணியில் மோடியின் இலங்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
19 minute ago
3 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago
26 Aug 2025