2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதிய யாப்பு வைத்த ஆப்பு

Mayu   / 2024 மார்ச் 07 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

தந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் முக்கியஅரசியல் நிகழ்வு 1972 இல் உருவாக்கப்பட்டபுதிய அரசியலமைப்பாகும். இது சுதந்திர இலங்கையை பிரித்தானிய கொலனித்துவத்தில் இருந்து முழுமையாக விடுவித்துநாட்டைக் குடியரசாக்கியது. அத்தோடு இலங்கையின் இன முரண்பாட்டின் இன்னொருகட்டத்தைத் தொடக்கிவைத்தது. 

1972 இன் புதியகுடியரசுஅரசியலமைப்பானது இலங்கையின் அரசியலமைப்பாக்க வரலாற்றிலிருந்து ஒரு வகையிலான தீவிரமான விலகலாகும்.விடுதலைப் போராட்டங்களின் விளைவிலான சுதந்திரமும் அதன் வழிப்பட்ட அரசியலமைப்பும் இந்தியாவுக்கு வாய்த்தது போல இலங்கைக்கு வாய்க்கவில்லை.

எனவே சுதந்திரத்துக்குப் பின்னரும் பிரித்தானிய கொலனியாதிக்கத்தின் எச்சசொச்சங்கள் நிலைத்தன.

நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியலமைப்பு இன்னும் பிரித்தானிய முடியை பெயரளவு அரச தலைவராக வைத்திருந்தது. இதை இல்லாமல் செய்ததன்  மூலம் 1972 அரசியலமைப்பானது “இலங்கையினது” என்ற உணர்வை வழங்கியது. 

சுதந்திரம்  அடைந்துகால் நூற்றாண்டுக்குப் பிறபுபிறகு, 1972 அரசியலமைப்பு பலவழிகளில் தேசியவாதத்தின் அடையாளமாக வலியுறுத்தப்பட்டது.

புதிய அரசியலமைப்பை அரசியலமைப்புச் சபையினால் உருவாக்கப்பட்டஒரு ‘தன்னியக்க’ அரசியலமைப்பாக அறிவிக்கும் அரசியல் சொல்லாட்சியில் இது வெளிப்பட்டது.

பிரதம மந்திரி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க, 1970 ஆம் ஆண்டு ஜூலைமாதம் பாராளுமன்றத்தில் இதைவலியுறுத்தினார்: “எங்களால் தெரிவு செய்யப்பட்டு எங்களால் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசியலமைப்புச் சபையை அமைப்பது உங்களது சவாலற்ற உரிமையாகும்.

இது கொலனித்துவ அடிபணிதலின் தளைகளை இறுதியாகவும் என்றென்றும் அசைத்தசுதந்திரமானமக்களின் விருப்பத்தைநிறைவுசெய்வதாகும்.”
ஒருதேசிய ஒருமித்த அனைத்துக் கருத்துக்களையும் சேகரிக்கும் அணுகுமுறையை இந்தபுதிய அரசியலமைப்பை உருவாக்கும்.

செயன்முறை குறித்து நின்றது.எனவே பன்முகப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிய ஒரு அரசியல் யாப்புக்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அதேவேளை ஒருமித்த கருத்துடன் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

1970 இல் ஒரு அமோக வெற்றியுடன், ஐக்கிய முன்னணிபெற்ற ஆணையே அந்த ஒருமித்தகருத்து என அரசாங்கம் முடிவு செய்து கொண்டது. இதனால் பரந்துபட்ட கலந்துரையாடலோ, கருத்துக்கேட்போ இன்றி அரசியல் யாப்பு வரைவு தயாரானது.

இதனால் அரசியல் நிர்ணய சபையின் முடிவில், எதிர்க்கட்சிகள் நடவடிக்கைகளில் இருந்து வெளிநடப்பு செய்தன அல்லது கடுமையான எதிர்ப்பைவெளிப்படுத்தின. இதன் விளைவாக, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறை ஒரு பாரபட்சமான விவகாரமாக பார்க்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் உள்ள 157 இடங்களில் 115 இடங்களை அரசாங்கக் கூட்டணி வென்றதால்,எந்த வகையிலான தீர்க்கமான நடவடிக்கைகளுக்கும் தேவையான நான்கில் மூன்றில் பங்குபெரும்பான்மையை அவர்களுக்கு இருந்தது. இதனால் எதிர்க்கட்சிகளுடன் இணங்கிப் போகவேண்டிய தேவையோ, உரையாடலோ அரசுக்குத் தேவையானதாக இருக்கவில்லை. 

புpரித்தானியக் கொலனித்துவம் உருவாக்கிவிட்ட தாராண்மைவாத ஜனநாயக ஆட்சி முறையை முழுவதுமாக மாற்றியமைப்பதற்கான தூரநோக்கான அரசியல் சித்தாந்தம் எந்தவொரு இலங்கைத் தலைவருக்கும் இருக்கவில்லை.

ஆதனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சமூகநல அரசை உருவாக்கும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒருதாராளவாத ஜனநாயக அரசாங்கத்தின் எலும்புக்கூடு எஞ்சியிருந்தாலும், 1972 அரசியலமைப்புஅரசியல் நெறியாகமாறிய பண்பாட்டுத் தேசியவாதத்தின் அபிலாஷைகளை தெளிவாக வெளிப்படுத்துவதாக இருந்தது.

இந்த பண்புக்கூறுகள் அரசியலமைப்பின் பகுதிகளாக இருந்தன, அவை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல.

பௌத்த மதத்திற்கு ‘அதிமுக்கிய இடம்” வழங்கப்பட்டது, சிங்களம் உத்தியோகபூர்வ மொழி ஆக்கப்பட்டது. இவை சிங்கள பௌத்த பண்பாட்டுத் தேசியவாதம் நிறுவன மயமாதலைக் குறித்தது. அத்துடன் அதற்கான அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதம் பல்லினபல்மத இலங்கைக்கு “சிங்களபௌத்த” என்ற அடையாளத்தைக் கொடுத்தது. 

1972 அரசியலமைப்பு பௌத்த மதத்தைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் ஒரு உறுதியான கடமையை அரசிற்கு வழங்குவதன் மூலம் பௌத்த நம்பிக்கையைஅரசமதமாகப் பதிவுசெய்தது.

மற்றமதங்கள் அரசியலமைப்பில் உள்ளஅடிப்படை உரிமைகள் என்ற அத்தியாயத்தால் மட்டுமே பாதுகாக்கப்பட்டன, எனவே அவை சில வரம்புகளுக்கு உட்பட்டன.

சுதந்திரத்திற்குப் பிந்தைய சகாப்தத்தில் பௌத்தம் ஆற்றியபங்கு, சட்டப்பூர்வ தன்மையை பேச்சுவார்த்தைக்குட்படுத்த முடியாத அரசியலமைப்பு ஏற்பாடாகக் கண்டறிந்தது. பௌத்தம் அரசியல் அடையாளத்தின் இன்றியமையாத அம்சமாக மாறியது. பௌத்த மதகுருமார்களுக்கு இலங்கை சமூகத்தில் அதன் மரியாதைக்குரிய இடம் வழங்கப்பட்டது. 

ஆயினும் கூட, 1950 களின் பௌத்த மதகுருமார்களின் கிளர்ச்சி ஏற்படுத்திய பாதிப்பை நன்கறிந்திருந்தபடியால்  1972அரசியலமைப்பு பௌத்த செல்வாக்கைஅதற்குரிய விஷயங்களுக்கு மட்டுப்படுத்தமுயன்றது.

பர்மாவைப் போல் அல்லாமல்,அரசியல் மற்றும் பொருளாதார முடிவெடுக்கும் முறைகளில் இலங்கை மதச்சார் பற்றதாகவே இருந்தது. மேற்கத்திய மயமாக்கலைநவீனமயமாக்கலில் இருந்துபிரிக்கும் ஒன்றாகவே சிங்கள பௌத்தத்திற்கான விருப்பம் அரசியலமைப்பின் பகுதியானது என்ற முடிவுக்கு பல ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

பிரதிநிதித்துவ ஜனநாயகத்துடன் பகுத்தறிவு பொருளாதார அமைப்பின் கோட்பாடுகள் ஒரு நவீன தேசிய-அரசின் ஆளுகைக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளாக உள்வாங்கப்பட்டன. பௌத்த செல்வாக்கு சமூகத்தின் கலாசார வாழ்க்கையிலும், அரசியல் சொல்லாட்சிகளுடன் இணைக்கப்பட்ட குறியீட்டிலும் மிகவும் உணரக்கூடியதாக இருந்தது. 

1972அரசியலமைப்புபௌத்தத்தைவாழ்வின் ஒருஅம்சமாகமாற்றும் வேலைத்திட்டத்தில் ஈடுபடவில்லை. ஆனால் தேசியவாதசுதேசியநோக்கில் பௌத்தத்திற்கு தலையாக நிலையை அளித்தது. இது காலப்போக்கில் அரசியல் வாழ்க்கை உட்பட வாழ்க்கையின் ஒவ்வொருஅம்சத்திலும் பௌத்தத்தை ஒரு பகுதியாகமாற்றமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன,ஆனால் 1972 அரசியலமைப்பின் வரைவு பௌத்தத்தை இன்னும் குறியீட்டுஅடிப்படையில் பார்த்தது.

இருந்த போதிலும்,சிங்களம் மட்டுமே அரசகரும மொழியாகியமை,புதிய யாப்பில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமை, தரப்படுத்தல்உள்ளிட்டவிடயங்கள் தமிழர்களிடையே அரசு மீதான எதிர்ப்புணர்வு திரட்சியடைவதற்கு வழிகோலின. 

1972 அரசியலமைப்பு சுதந்திரமான பொதுநிர்வாகம் என்ற கருத்தைநீக்கி, நாட்டின் முழு நிர்வாக அமைப்பையும் அமைச்சரவையின் கீழ் கொண்டுவந்தது.

வேகமாக வளரும் சமூகத்தில் ‘சுதந்திரம்’ மற்றும் ‘நடுநிலைமை’ சாத்தியமில்லை என்றவாதம் முன்வைக்கப்பட்டது. இவ்வளவு காலமும் பொதுச் சேவை என்பது உயரடுக்கினரின் ஒருபகுதியாகவேஅவரிதம் நலன்காக்கும் கருவியாகவே இருந்தது.

இதைமாற்றி, எவ்வாறாயினும், ஜனரஞ்சகக் கூறுகளைக் கொண்ட தகுதித்துவம் என்ற கருத்தை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, 1972 அரசியலமைப்பானது அதிகாரத்துவத்தை அரசியல் மயமாக்குவதற்கு வழி செய்தது.

இலங்கையின் இனமுரண்பாட்டில் 1972 அரசியலமைப்பு குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டு பண்ணியது. இதற்குப் பலகாரணிகள் பங்களித்தன.

தமிழரிற் பெரும்பாலோரது தாயகமான யாழ்ப்பாணக் குடாநாட்டின் பொருளாதாரம் நீண்ட காலமாகவேகுடா நாட்டுக்குவெளியே  சிறுவணிகத்தின் மீதும்,அரசதுறை சம்பளங்களின் மீதே தங்கியிருந்தது. அதனாலேயே அது “மணிஓடர்” பொருளாதாரம் என்று அறியப்பட்டது. அரச தொழில்களை வழங்குவதிலும், கல்வியிலும் கடைப்பிடிக்கப்பட்ட ஒழுங்கு முறையான பாரபட்சத்தின் பயனாக அரசாங்க ஊழியர்களாகத் தமிழரின் விகிதாசாரம், சனத்தொகைக்கு உரியதைவிடக் குறைந்தது.

1950கள் தொட்டுத், தென்னிலங்கையில் அரசநிதியுடனும் அந்நிய“உதவியுடனும்’ பெரிய, நடுத்தர அளவிலான தொழில்கள் நிறுவப்பட்ட போதும்,வடக்கிலும் கிழக்கிலும் குறிப்பிடத்தக்களவில் தொழிற்சாலைகள் நிறுவப்படவில்லை.

கிழக்கிலே நிறுவப்பட்ட தொழில்கள் சிங்களக் குடியேற்றங்களை ஊக்குவிக்கும் நோக்குடையனவாய் இருந்தன. 

1970களில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியின் பயனாகவும், அரசாங்கம் ஒரு அந்நியச் செலாவணிப் பிரச்சினையை எதிர்நோக்கியது. எனவே பல அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியையும்,உள்நாட்டில் பயிரிடக்கூடிய மிளகாய், வெங்காயம்,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .