2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

தடுகம் ஓயாவில் கடல் விமான சேவை

Menaka Mookandi   / 2012 மே 21 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


சீதுவை தடுகம் ஓயா ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடல்விமான சேவையின் நுழைவுப் பாதையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத் திட்டம் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டதாகும். கடல் விமான சேவையினால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் நன்மை அடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, மேல்மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷஜல் ராஜபக்ஷ பெயர் படிகத்தை திரை நீக்கம் செய்து கடல்விமான சேவையின் நுழைவுப் பாதையை திறந்து வைத்தார்.







  Comments - 0

  • nithyanantha Wednesday, 25 July 2012 11:17 AM

    இலங்கை அபிவிருத்தி அடைகின்றது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X