Janu / 2026 மே 12 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு, பணத்திற்காக பிணை வைப்பவர்களை அறிமுகப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரையும், அதற்கு உடந்தையாக இருந்த மற்றுமொருவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று உத்தரவிட்டார்.
வாழைத்தோட்டம் (கெசல்வத்த) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த இரு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், "கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர், முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டில் பணிபுரிபவர்" எனக் குறிப்பிட்டனர்.
20 minute ago
40 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
51 minute ago
1 hours ago