Janu / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி பகுதியில் உள்ள அலுவலகம் ஒன்றில், உயிரிழந்த சக ஊழியரின் மரண வீட்டிற்கு வைப்பதற்காக நிறுவனத்தினால் வழங்கப்பட்ட மலர்வளையத்திலும் (Wreath) பணத்தை மோசடி செய்து, தனது கௌரவத்தை தொலைத்துக்கொண்ட நபர் ஒருவர் பற்றிய சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.
நிறுவனமொன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அண்மையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த ஊழியரின் வீட்டிற்கு அருகிலேயே இன்னொரு ஊழியரும் வசித்து வந்ததால், மரண வீட்டிற்கு நிறுவனத்தின் சார்பில் மலர்வளையம் ஒன்றை வாங்கி செல்லும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான செலவுத் தொகையை நிறுவனமே ஏற்கும் என்றும் அவருக்கு அறிவிக்கப்பட்டது. மலர்வளையம் வாங்குவதற்காக அவர் அன்றைய தினம் நகருக்குச் சென்றார்.
ஊழியரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் நாளன்று, மலர்வளையத்தை எடுத்துக்கொண்டு அவர் வந்து கொண்டிருந்தபோது, அலுவலகத்தின் ஏனைய ஊழியர்களும் அங்கு வந்திருந்தனர். மலர்வளையத்தைத் தயார் நிலையில் வைத்திருந்த இவருக்கு, அதே மரண வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நண்பர் ஒருவர் தற்செயலாக வழியில் தென்பட்டுள்ளார். நண்பரும் அதே இடத்திற்குத்தான் செல்கிறார் என்பதால், அவருடன் மோட்டார் சைக்கிளிலேயே மலர்வளையத்தை எடுத்துக்கொண்டு அவர் மரண வீட்டிற்கு வந்து சேர்ந்த அவர் மலர்வளையத்தை அங்கே வைத்துவிட்டு, சக ஊழியர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.
மரணச் சடங்குகள் முடிந்து ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கடந்த பின்னர், தான் வாங்கிய மலர்வளையத்திற்கான செலவு தொகையை பெற்றுக்கொள்வதற்காக அவர் அலுவலகத்தில் ஒரு 'வவுச்சரை' (Voucher) சமர்ப்பித்தார். அதில் இரண்டு செலவுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஒன்று மலர்வளையத்திற்கான தொகை, மற்றொன்று மலர்வளையத்தை எடுத்து வருவதற்காகப் பயன்படுத்திய முச்சக்கரவண்டி (Three-wheeler) கட்டணம்.
இந்த வவுச்சரை பரிசோதிக்கும் பொறுப்பில் இருந்த பெண் ஊழியர், அன்றைய தினம் அவர் மலர்வளையத்தை எவ்வாறு கொண்டு வந்தார் என்பதை நேரில் கண்டுள்ளார். அவர் அந்த நபரை அழைத்து இது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். "மலர்வளையத்தை ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரா உங்களிடம் பணம் வாங்கினார்?" என்று அவர் கேட்டார்.
விடயம் வெளியே தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த அந்த நபர், அந்த செலவு தொகையை மட்டும் நீக்கிவிடுமாறும், தயவுசெய்து இதை யாரிடமும் சொல்லிவிட வேண்டாம் என்றும் அந்த பெண் ஊழியரிடம் கெஞ்சினார். இருப்பினும், செய்தி காட்டுத்தீயாக அலுவலகம் முழுவதும் பரவிவிட்டது. "மரண வீட்டிற்கு செய்த செலவிலும் இப்படி ஒரு மோசடியா?" என சக ஊழியர்கள் அவரை ஏளனமாக பேச தொடங்கியதால், அந்த நபர் தற்போது தலைகுனிந்து நிற்கிறாராம்.
29 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago