2025 மே 20, செவ்வாய்க்கிழமை

42 அகதிகள் நாளை நாடு திரும்புவர்

Kanagaraj   / 2015 நவம்பர் 23 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டுள்ள அகதிகளில் இலங்கை தமிழ் அகதிகள்  42 பேர், நாளை 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைஇலங்கையை வந்தடையவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய (UNHCR) வசதிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்புடன் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் வழிகாட்டலுடன் இவர்கள் நாடு திரும்பவுள்ளனர்.

இவர்களுக்கு இலங்கையை வந்தடைவதற்கு இலவசமாக விமான பயணச்சீட்டு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படும். அத்துடன் மீள் சமூக ஒருங்கிணைப்பிற்கான நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 75 அமெரிக்க டொலர்களும், போக்குவரத்து நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 19 அமெரிக்க டொலர்களும், உணவு அல்லாத பண நன்கொடையாக ஒவ்வொரு குடும்பத்துக்கும்; 75 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் 2011 ஆம் ஆண்டிலிருந்து 5,600 அகதிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் இதில் 4,446 பேர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வசதிப்படுத்தப்பட்டவர்களாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் இருப்பதாகவும், இந்தியாவிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் பிரகாரம் 109 முகாம்களில் 64,310 பேர் இருப்பதாகவும் இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50,421 பேரும் சிறுவர்கள் 13,889 பேரும் காணப்படுகின்றனர். ஏனையவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வசிக்கின்றனர் என்றும் செயலாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X