2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘அனைத்துக்கும் காரணம் இ.தொ.கா’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கவிதா சுப்ரமணியம்

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை பெற்றுத் தருவதாக கோஷமிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸினரே, தற்போது 730 ரூபாய் சம்பளத்துக்கு இணக்கம் தெரிவித்து கைச்சாத்திட்டுள்ளனர்’ என்று, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினரே. தற்போது அவர்களுக்கு 730 ரூபாயை மாத்திரம் சம்பளமாக பெற்றுக்கொடுத்ததும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸினரே” என்றும் அவர் கூறினார்.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் கிடைத்தால் நாம் சந்தோஷப்படுவோம். அதனாலேயே, அவர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதாக கூறியவர்களுக்கு நாம் ஆதரவளித்தோம்” என்றும், மனோ கணேசன் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .