2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘அரசாங்கம் தப்பிக்க முடியாது’

George   / 2016 நவம்பர் 10 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யொஹான் பெரேரா

மத்திய வங்கியின் பிணைமுறிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், அரசாங்கத்தால் தப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி, இது  தொடர்பாக பல்வேறு பிரசாரங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தது.

நேற்றுப் புதன்கிழமை (09), கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

“மேற்படி மோசடி ​தொடர்பில், நாம் ஆறு கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளோம். கோப் குழு அறிக்கையின் பிரகாரம், விசாரணைகளை மேற்கொள்ளுதல், இந்த ஊழலுக்கு பொறுப்பானர்கள் தண்டிக்கப்படல் மற்றும் நட்டத்தை திருப்பிச் செலுத்துதல் போன்ற கோரிக்கைகள், அவற்றில் உள்ளடங்குகின்றன.

இதேவேளை, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், தற்போது அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகள் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளும் பறிமுதல் செய்யப்படல் வேண்டும்” என்று, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .