2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'ஆவா தொடர்பில் ராஜிதவுடன் பேசத் தயார்’

George   / 2016 நவம்பர் 10 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

“யாராவது ஒருவர் தப்புச்செய்தார் என்பதற்காக, முழு இராணுவத்தினர் மீதும் குற்றஞ்சாட்ட முடியாது. ஆவா குழுவுடன் இராணுவத்துக்குத் தொடர்பு உள்ளது என்று கூறப்படுவதை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்” எனத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன,  அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கும் கருத்துகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடிவிட்டு பின்னர் பதில் சொல்கின்றேன்” என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.  

மேலும், “ஆவா குழுவுடன் இராணுவத்துக்கு தொடர்பு உள்ளது என்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஆதாரங்கள் இருந்தால், அதை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைத்தால் விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் அவர் கூறினார்.

ஆவா குழு, முன்னாள் பாதுகாப்பு செயலாளரால், இராணுவ அதிகாரியைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் இராணுவத்துக்கு தொடர்பு உள்ளது என்றும் ராஜித தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டதுக்கு பதிலளிக்கையில் இதனைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .