Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாத்வீகத்தில் ஆயுதத்தில் போராடிவந்த நாங்கள் மீண்டும் மக்களுடைய பேராதரவுடன் தொடர்கின்ற இந்தப் போராட்டம் ஒரு நியாயமான வெற்றியைக் கொடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
யாழ். முற்றவெளி மைதானத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் பேரணி நிகழ்வில்இ உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இன்று மக்களுடைய சரித்திரத்திலே ஒரு மிகப்பெரிய சாதனையென்றே கூறவேண்டும். தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக மிகப் பெரிய அளவிலே தங்களுடைய அடிப்படை உரிமைகளை என்றுமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக மிக உரத்த குரலிலே கூறியிருக்கின்றார்கள்.
உங்களுடைய குரல்கள் சர்வதேசத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அரசாங்கத்துக்கும் மிகத் தெளிவாகக் கேட்கும். எங்களுடைய அடிப்படை நியாயபூர்வமான உரிமைகளை வென்றெடுக்கும் வரை ஏறக்குறைய 60 வருடங்களாக சாத்வீகத்தில் ஆயுதத்தில் போராடிவந்த நாங்கள் மீண்டும் மக்களுடைய பேராதரவுடன் தொடர்கின்ற இந்தப் போராட்டம் ஒரு நியாயமான வெற்றியைக் கொடுக்கும்.
அப்படியான ஒரு வெற்றியை எடுப்பதன்மூலம்தான் ஆயிரக்கணக்கான தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்த அனைத்தியக்க போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நாங்கள் மிகப்பெரிய அஞ்சலியை செலுத்தியவர்களாக இருப்போம் என்றார்.
8 minute ago
44 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
44 minute ago
4 hours ago