2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

2026 வரவு செலவு திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்  இடம்பெற்றது.

இங்கு, போக்குவரத்துத் துறை தொடர்பில் தனித்தனியாக, நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், கிராமிய வீதிகள் ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், துறைமுகங்கள் மற்றும் அதன் செயற்பாடுகளுக்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள், அந்த ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்பட்ட விதம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு கேட்டறிந்தார்.

கிராமிய வீதிகளில் பஸ்களை இயக்குவது இலாபகரமானதாக இல்லாவிட்டாலும் அந்த சுமையை அரசாங்கம் ஏற்று மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தைத் திட்டமிடும்போது, நாட்டை தற்போதைய நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு முக்கியமான துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். 

அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் ஆகிய துறைகளை நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையிலான  திட்டங்களில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .