2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இரண்டாம் கட்டம் செப்.17இல் கையளிப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுவலையிலிருந்து கடவத்தைவரையிலான வெளிவட்ட நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தை, பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல செப்டெம்பர் 17ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

வெளிவட்ட வீதி நீடிக்கப்பட்டால் கடுவலையிலிருந்து மாத்தறைக்கு சுமார் ஒன்றரை மணித்தியாலத்தில் வாகனங்கள் செல்லக் கூடியதாக இருக்கும்.

8.9 கிலோமீற்றர் நீளமான கடுவலை - கடவத்த வெளிவட்ட வீதி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலை என்பவற்றோடு இணைக்கப்பட்டு, வாகனங்கள் கொழும்புக்கு வராமல் தாம் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதற்கு இதனூடாக வழியேற்படுத்தப்படும்.

கடுவலை - கடவத்தை வெளிவட்ட வீதியில் இரண்டாம் கட்டபணிகள் 2012ஆம் ஆண்டு, 44 பில்லியன் செலவு மதிப்பீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஐந்து மேம்பாலங்கள், களனி கங்கை மேலான 250 மீற்றர் நீளமான ஆறு ஒழுங்குகளைக் கொண்ட பாலம் என்பன இந்த வெளிவட்ட நெடுஞ்சாலையினுள் அடங்குகின்றன. 

நான்கு ஓடு பாதைகள் கொண்ட இந்த நெடுஞ்சாலை, மூன்று கட்டணம் அறவிடும் கட்டடங்களையும் மூன்று கட்டணம் செலுத்தும் சாவடித் தொகுதிகளையும் கொண்டிருக்கும்.

வாகனப் பயணங்கள் தாம் செல்ல வேண்டிய இடங்களுக்கு கொழும்பு வராமல் செல்ல வழியேற்படுத்தப்படுவதால் அவர்களின் பெருமளவு நேரம் மீதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .