2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

2020இல் சு.க ஆட்சி?

Kogilavani   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டமைக்கும் நல்லிணக்கக் கூட்டம், தற்போது நிறைவுக்கு வந்துவிட்டது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டு, சு.க.வே ஆட்சியமைக்கும்” என, மேல்மாகாண அமைச்சர் காமினி திலகசிறி தெரிவித்தார்.   

“எதிர்காலத்தில், ஆசிரியர்கள், இளைஞர் - யுவதிகள், தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள் எனச் சகலரையும் ஓரணியில் இணைத்துக்கொண்டு, இந்த இலக்கை அடைய, சு.க எதிர்பார்த்துள்ளது” என்றும் அவர் கூறினார்.   

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.   

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “ஒன்றிணைந்த எதிரணியினரின் நுகேகொடை பேரணியில், சு.க உறுப்பினர்களும் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதியில், முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டே, பேரணியை வழிநடத்திச் சென்றார்” என்றும் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X