Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 02 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ப.பிறின்சியா டிக்சி
2016ஆம் ஆண்டு, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐயும் தாண்டியுள்ளதாக, சுகாதார அமைச்சுத் தெரிவித்தது.
இதற்கமைய கடந்த 12 மாதங்களில், 77க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 50,519 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவுதொற்று நோய்ப பிரிவு சுட்டிக்காட்டியது. மேல் மாகாணத்திலேயே 49.46 சதவீதமானவர்கள் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய 3,407 பேர் கொழும்பு மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளிலும் 12,014 பேர் கொழும்பை அண்டிய பகுதிகளிலும் என 15,421 பேர், கொழும்பு மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், கம்பஹா - 6,263, களுத்துறை - 3,303, இரத்தினபுரி - 2,969, காலி - 2,702, குருநாகல் - 2,415, யாழ்ப்பாணம் - 2,227, புத்தளம் - 1,002, மட்டக்களப்பு - 537 மற்றும் அம்பாறை - 238 பேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவ் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், மூன்று நாட்கள் காய்ச்சல் தொடர்ந்தும் நீடிக்குமாயின் வைத்தியரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago