2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

2015இல் போதைப்பொருள் குற்றச்செயல்கள் அதிகரிப்பு

deeptha   / 2016 ஜூன் 12 , பி.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள், கடந்த 2015ஆம் ஆண்டு 89,996 ஆக பதிவாகியுள்ளதாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்புடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு இந்தத் தொகை 74,366 ஆக காணப்பட்டதாகவும் கடந்த வருடம் இந்தத் தொகை அதிகரித்து காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு, இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 87,846 முறைப்பாடுகள் இதுவரை விசாரணை செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் 2014ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 71,712 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு 113,944 மதுபானம் தொடர்புடைய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள அதேவேளை, அவற்றுள் 109,256 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் பெறப்பட்டுள்ளதாகவும் 2014ஆம் ஆண்டை விட இந்தத் தொகை குறைவாகக் காணப்படுவதாகவும் அறியமுடிகின்றது. 2014ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுள் 114,790 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும், சிறுவர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் 2015ஆம் ஆண்டு 5,911ஆக காணப்பட்டதாகவும் இந்தத் தொகை 2014ஆம் ஆண்டு 5,868ஆக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 8,288 குற்றச்செயல்களும் 2014ஆம் ஆண்டு 8,434 குற்றச்செயல்களும் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .