2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘இலங்கை அகதிகள் செல்வதே நல்லது’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள், சொந்த நாட்டுக்குச் செல்வதே நல்லது என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னையை அடுத்த காவாங்கரை இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்.

ராதாகிருஷ்ணன், வர்தா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தமிழக அரசாங்கம் செய்துள்ள நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், புழல் ஏரியை பார்வையிட்ட அமைச்சர், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து குறித்தும் கேட்டறிந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  

காவாங்கரை அகதிகள் முகாமில் பாதிக்கப்பட்ட வீடுகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்றும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள், சொந்த நாட்டுக்கு செல்வதே இலங்கை தமிழ்ச் சமூகத்துக்கும், அவர்களுக்கும் நல்லது என்றும் கூறினார். மேலும் அகதிகள் முகாமில் நிரந்தர குடியிருப்புகள் கட்டப்படுவது குறித்து கோரிக்கை வந்தால், அதுகுறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .