2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'உயிர்களை காக்கும் யோசனை'

Princiya Dixci   / 2016 நவம்பர் 14 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்துக் குற்றங்களுக்கான தண்டப்பணமாக ஆகக் குறைந்தது 2,500 ரூபாயை அறிவித்தமை தொடர்பில், போக்குவரத்துடன் தொடர்புடைய சங்கங்களிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், உயிர்களைக் காக்கும் நோக்கிலேயே இவ்வாறான யோசனையை முன்வைத்ததாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

வீதி விபத்துகள் காரணமாக, வருடத்துக்கு மரணமடைக்கின்ற ஆயிரக்கணக்கான சாரதிகள் மற்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாக்கும் தூரநோக்கத்துடனேயே, இந்த யோசனையை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

இந்த யோசனையை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் விடுத்திருந்த கோரிக்கையையும் நிதியமைச்சர் நிராகரித்தார். 

பொலிஸாரிடமிருந்து கிடைத்த அறிக்கையின் பிரகாரம் இவ்வருடம், இதுவரையிலும் (2016) மட்டும் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் காரணமாக, அண்ணளவாக 3,000 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார். 

நாட்டில் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகளுக்காக வீதிச் சட்டப் பாதுகாப்பு மற்றும் அந்தச் சட்டத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு, அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்காது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .