2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

‘ஏற்றுமதி துறைக்கு புதிய திருப்புமுனை’

Niroshini   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இலங்கை ஏற்றுமதி செயற்பாடுகளில் நுழைவதற்கு உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான சோஹாரின் சக்தி வாய்ந்த வளைகுடா ஒத்துழைப்பு சபை அதன் கதவுகளை திறந்துள்ளது. இது இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஒரு புதிய திருப்புமுனையாகும்” என,  ஓமன் நாட்டின்வெளியுறவு அமைச்சின் அரச விவகாரங்களுக்கான தற்காலிக துணைச்செயலாளர் டொக்டர் மொஹமட் பின் அவாத் அல் ஹசன் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“சோஹார் துறைமுக நகரம்  ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கை மையமாக கொண்ட நாடுகள் மத்தியில் ஏற்றுமதிக்கு அப்பால் இலங்கையின் முக்கிய உற்பத்தி மற்றும் மீள் ஏற்றுமதி மீது  பன்மடங்கு நன்மைகள் கிடைத்திருக்கின்றன.

 சோஹார் துறைமுக நகரம் மற்றும் சுதந்திரபொருளாதார வளையம் ஊடான புதிய கட்டத்தில்  சிலோன் தேயிலையின் மைய சாத்தியங்களைப் பற்றி நாம் கலந்துரையாட விரும்புகின்றோம். வளைகுடா ஒத்துழைப்பு சபை, இந்திய உபகண்டம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா பிராந்தியங்களில்  சிலோன் தேயிலை மற்றும் மீள் ஏற்றுமதியினை செயற்படுத்தி கொள்ளலாம்.

சோஹாரில் இருந்து இலங்கையின் தேயிலை மற்றும் ஏனைய ஏற்றுமதிகளுக்கு வளைகுடா பிராந்தியத்தின் 3.5 பில்லியன் வாடிக்கையாளர்களை நேரடியாக எட்ட முடியும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X