2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘ஐ.நாவில் அவகாசம் கேட்போம்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் முடிந்த யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்களை விசாரிப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்துக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கூடுதல் காலம் தனக்கு தரப்பட வேண்டும் என அரசாங்கம் கூறியது.  

பெப்ரவரி 27 இல் தொடங்கும் ஐ.நா மனித உரிமை அமர்வில் அரசாங்கம் கூடுதல் காலம் தரும்படி கேட்கும் என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறினார். 

​​வெளிநாட்டு ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை, சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

யுத்த குற்றங்களை விசாரித்தல் உட்பட இன நல்லிணக்கத்துக்காக, உழைப்பதாக ஐ.நா மனித உரிமை மன்றில் இலங்கை ஒரு கூட்டு தீர்மானத்தை சமர்ப்பித்தபோது உறுதி வழங்கியது. 

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், வெளிநாட்டு, உள்நாட்டு நீதியரசர்கள் கொண்ட நீதிமன்றத்தை அமைக்க வேண்டுமெனக் கூறினார். 

முன்னர் வெளிநாட்டு நீதியரசர்களை ஏற்றுக்கொள்வதாக கூறிய இலங்கை இப்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகி உள்நாட்டு நீதிமன்றத்​தை வலியுறுத்தி நிற்கிறது என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X