2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘ஒன்றிணைந்த எதிரணி பிரதமருக்கு எதிராகக் குரல் கொடுக்கும்’

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தொடர்பான சர்ச்சையான பிணை முறி மோசடியில் பிரதமரும் தொடர்பு கொண்டுள்ளதால், அவருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி, குரல் கொடுக்கும் என ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (08) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது, பிணைமுறி மோசடியில் பிரதமர் தொடர்புபட்டிருப்பதனால் அவர் கண்டிப்பாக பதவி விலக வேண்டும் . 

உலக நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது பிரதமர் பதவி விலகியுள்ளனர்.  அத்தோடு, தவறை கண்டால் சிறப்பாக செயற்பட வேண்டிய CID யினர் இந்த விடயத்தில் தவறு செய்தவர்களை காப்பாற்றி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .