2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘ஒரே கொள்கைதான்’

Gavitha   / 2016 நவம்பர் 10 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா  

ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு​ செய்யப்பட்டுள்ளமையானது, இலங்கை மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.   

நேற்றுப் புதன்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   
இதில் கலந்துக்கொண்ட, கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேலும் உரையாற்றுகையில்,   

“ட்ரம்ப்பினால் இலங்கைக்கு எதுவும் கிடைக்கப்போவதும் இல்லை. தற்போது இருக்கும் கொள்கைகளே தொடர்ந்தும் இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.   

“அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற்றிருந்தாலும் இலங்கைக்கு கிடைக்கப்போவது ஒன்றுமில்லை. அமெக்காவின் தேசியக்கொள்கைகள், நாடுகளில் உள்ள சர்வதேச நிறுவனங்களை வைத்தே தீர்மானிக்கப்படுமேயொழிய, அரசியல்வாதிகளை வைத்து அல்ல” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

“இவ்வாறான கொள்கைகளை மாற்றுவதற்கு முயற்சி செய்த, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் படுகொலைச் செய்யப்பட்டார்” என்றும் அவர் தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .