Kogilavani / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி( ஓ.ஐ.சி) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை, அந்நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொஹூவளை வர்த்தகரிடம் 25 இலட்சம் ரூபாவை, இலஞ்சமாகப் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள், கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
பொலிஸ் நிலைய குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி, எதிர்வரும் 11ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொறுப்பதிகாரி, 15ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
10 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
29 minute ago