Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 மார்ச் 08 , பி.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகக் கருத்தரங்கொன்றின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இலங்கையில் காணப்படும் எந்தவொரு கடையிலும், இந்த சுவையூட்டியைக் கொள்வனவு செய்ய முடியும். இது, மொனோ சோடியம் க்ளூடோமேட் (எம்.எஸ்.ஜீ) என்ற
விஞ்ஞானப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. உணவுகளைச் சுவையூட்டுவதற்காக உலக நாடுகள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் இந்த சுவையூட்டியானது, அமைதிக் கொலையாளியாக தொழிற்பட்டு வருகின்றது என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்' என்றார்.
'சில காலங்களாகவே மனித உடலுக்குள் சேர்க்கப்படும் இந்த சுவையூட்டியினால், உடற்பருமன் அதிகரிப்பு, கண்களில் கோளாறு, அதிக களைப்பு, இரைப்பை நோய்கள், உணர்விழப்பு, எரிச்சல், முகத்தசைகள் இறுக்கடைதல், நெஞ்சு வலி, தலைவலி, வாந்தி, வயிற்றோட்டம், இதயத்துடிப்பு அதிகரிப்பு, தூக்கம் அதிகரிப்பு, உடற்சோர்வு, பலமிழப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இந்தச் சுவையூட்டிக்குத் தடை விதித்து, அவற்றை வர்த்தக நிலையங்களிலிருந்து அகற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஆலோசனை வழங்கியுள்ளார். உணவகங்களில், உணவுகளைக் கொள்வனவு செய்து உட்கொள்பவர்களே, இந்த சுவையூட்டிகளின் தாக்கத்துக்கு அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
தற்காலத்தில், இந்த சுவையூட்;டிகளையே களை நாசினிகளாகப் பயன்படுத்தியிருந்தனர்' என்று பாலித மஹிபால மேலும் கூறினார். உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய மொனோ சோடியம் க்ளூடோமேட் (எம்.எஸ்.ஜி) சுவையூட்;டியை, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விற்பனை நிலையங்களிலிருந்து முற்றாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் பாலித மஹிபால, நேற்று அறிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago