2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

‘சி.வி.க்கு எதிரான நடவடிக்கை என்ன?’

Gavitha   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எழுக தமிழ் பேரணியின் போது, உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாட்டுக்கும் மக்களுக்கும் மற்றும் பௌத்த சாசனத்துக்கும் கெடுதியான விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலும் அரசியலமைப்புக்கு முரணான வகையிலும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அது தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்னவென, ஒன்றிணைந்த எதிரணியினர், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04), சபையில் கேள்வி எழுப்பினர். 

23/2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ், நாடாளுமன்றத்தில் நேற்றுக் கேள்வி எழுப்பிய ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, அங்கு தொடர்ந்து கூறியதாவது,  

“வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அரசியலமைப்பின் பிரகாரம் உறுதிமொழி வழங்கியே, வட மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றிருந்தார். எனினும், நாட்டுக்கும் மக்களுக்கும் அதேபோல், புத்த சாசனத்துக்கும் கெடுதியான விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை, அவர் தமது உரையின் போது வெளியிட்டுள்ளார்.  

வட மாகாண முதலமைச்சர், அரசியலமைப்புக்கு முரணான வகையில் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளதை அறிந்திருந்தும், அதற்கு அரசாங்கம் அனுமதித்தது ஏன்? இது தொடர்பில் அரசாங்கம், உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்போகும் கண்டனம் என்ன? இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? இந்த விடயத்தில் கண்டிக்க வேண்டிய பொறுப்பு, அரசாங்கத்துக்கு இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .