2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

‘சட்டத்தின் பிரகாரமே அம்மான் கைதானார்’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, அரசாங்கம், நேற்று அறிவித்தது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்னவிடம், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,  

“கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்துக் சொந்தமான வாகனங்கள் பல காணாமல் போயிருந்தன. அவற்றைத் தேடும் நடவடிக்கையின் போது, பலர் கைதுசெய்யப்பட்டனர்.  

முன்னாள் பிரதியமைச்சரருக்கு வழங்கப்பட்ட வாகனத்தை திருப்பிக் கொடுக்காமல் மறைத்து வைத்தார். அது தொடர்ப்பில் அவரிடம் கேட்டதுக்கு தெரியாது என்று கூறியிருந்தார். 

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த வாகனம் ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது. அதனையடுத்தே, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், அவரைக் கைது செய்தனர். இது குறித்து கூறுவதற்கு, வேறு ஒன்றும் இல்லை” என்று, அமைச்சர் மேலும் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X