2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘சத்தமிட்டால் நல்லவர்கள்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. பிறின்சியா டிக்சி

“எல்லா மூலைக்கும் அபிவிருத்தி கிடைக்க வேண்டும் என்ற ரீதியில் அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம். எமது திட்டங்கள் குறித்து நாங்கள் சத்தமிடாமல் இருப்பதுதான், நாங்கள் செய்த தவறு” என, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, தெரிவித்தார். 

நிதியமைச்சில், நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கூறியதாவது,  

“அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவில்லை என, எம்மீது குற்றஞ்சாட்டுகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 11 வருட ஆட்சிக்காலத்தில், 4 வீதிகள் அமைக்கப்பட்டன. அவற்றை வைத்துக்கொண்டு, அவர்கள் சத்தமிடுகின்றனர். இந்தத் திட்டங்கள், மஹிந்தவின் ஆட்சியில் செயற்படுத்தப்பட்டிருந்தாலும், அவை, ஐக்கிய தேசியக் கட்சியால் முன்வைக்கப்பட்ட திட்டங்களாகும். 

வெஹிகல் லங்கா நிறுவனம் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறிச் செயற்படுவதாக வெளியான செய்திகளில், எவ்வித உண்மையும் இல்லை. இந்த நிறுவனம், நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட ஒன்று. இது தொடர்பில், அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பத்திரம் பற்றிய தீர்மானத்தை, அமைச்சரவை ஒத்திவைத்துள்ளது” என்று, அவர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X