Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான உண்மைத்தன்மையை உயரதிகாரிகள் மூடி மறைத்திருந்தால் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம்,
நேற்றுப் புதன்கிழமை அறிவித்துள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற, வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியானார்கள். இந்தவிவகாரம், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், கடும் சூடுபிடித்திருந்தது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், உயிரிழப்புக்குரிய விபத்தொன்று இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் அந்த சம்பவ இடத்துக்கு, குறிப்பிட்ட தரத்திலான பொலிஸ் உயரதிகாரிகள் சென்று பார்வையிட்டிருக்க வேண்டும். உயரதிகாரிகள், தகவல்களை மூடி மறைத்தமைக்கான ஆதாரங்கள் விசாரணைகளின் கிடைக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். அது உள்ளக ஒழுக்காற்று நடவடிக்கையாகவும் இருக்கலாம். எவ்வாறிருப்பினும், சம்பவ இடத்தில் இருந்த பொலிஸ் அதிகாரிகளே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
10 minute ago
33 minute ago
49 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
33 minute ago
49 minute ago
54 minute ago