Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 10 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டதை வரவேற்பதாக அறிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, அவரது வெற்றியானது, உலக அமைதிக்கு நல்லது என்றார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரது வெற்றியானது, உலக சமானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் முக்கியமானது. உலகப் பிரச்சினைகளை பார்ப்பதற்கு முன்னாள், உள்ளூர் பிரச்சினைகளைப் பார்ப்போம் என்று தெரிவித்திருந்தார். ஆகையால், உலக விவகாரங்களில் குறைந்தளவாக குறுக்கீடுகளே இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றிப்பெற்றால், 500 ஏக்கரில் கோல்ப் மைதானம் மற்றும் டிரம்ப் கட்டிடம் ஆகியவற்றை நிர்மாணிப்பதாக, இந்தியாவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அவ்வாறேதும் நடக்குமா என்று வினவுகையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு தெரிவித்திருந்தால் அவர் செய்வார். ஏனென்றால், குடியரசுக் கட்சியுடன், பிரதமர் ரணிலுக்கு நல்ல உறவு இருக்கின்றது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago