2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் அதிர்ச்சியாகவுள்ளன'

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக பதவியேற்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அரபு நாடுகள் மீது விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகள் சர்வதேச அரங்கில் சூடான பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த உத்தரவை ஏற்கமறுத்த தலைமை வழக்கறிஞரை அமெரிக்க ஜனாதிபதி பதவி நீக்கம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் செவ்வாய்க்கிழமை (31) இரவு நடைபெற்ற சன்மார்க்கச் சொற்பொழிவு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு உரையாற்றும்போது மேலும் கூறியதாவது,

அகதிகள் வருகையைக் கட்டுப்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளதாக கூறும் அமெரிக்கா மீது, சம்பந்தப்பட நாடுகள் தங்களது சக்திக்கேற்றவாறு கவலையையும், கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன. இவ்வாறான தடைகளை எங்களது நாட்டுக்குச் செய்துவிட வேண்டாம் என்று கெஞ்சுகின்ற பாணியில் சில நாடுகள் அமெரிக்காவுடன் பேசி வருகின்றன.

உலக வல்லரசாகப் பார்க்கப்படும் அமெரிக்கா, முஸ்லிம்களை ஒடுக்குவதில் முனைப்புக் காட்டிவரும் இவ்வாறானதொரு சூழ்நிலையில், அல்குர்ஆனில் கூறப்படும் சில வசனங்களுக்கு மாற்று மதத்தினர் தவறான கற்பிதங்களைப் புரிந்துகொண்டுள்ளனர். இஸ்லாம் அன்பைப் போதிக்கின்ற, எதிரியாக இருந்தாலும் அடைக்கலம் கொடுக்கின்ற கருணையுள்ள மார்க்கமாகவே இருக்கின்றது.

பிற சமயத்தவர்களால் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட அல்குர்ஆன் வசனங்களுக்குச் சரியான விளக்கத்தையும், தெளிவையும் நாம் கொடுக்கவேண்டும். இங்கு அல்குர்ஆன் விளக்கவுரை நிகழ்த்திய, அஷ்ஷெய்க் அறபாத் (நளீமி) அதுபற்றி போதிய விளக்கத்தை வழங்கினார். இந்த விளக்கங்கள், இஸ்லாத்தைத் தவறாக புரிந்துகொள்கின்ற சமூகத்தினர் மத்தியிலும் கொண்டு செல்லப்பட வேண்டும். இவ்வாறான உரைகள் எதிர்காலத்தில் நூலுருவில் கொண்டுவரப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X