2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'தேசிய ஊடக மத்திய நிலையம்' அமைக்க அமைச்சரவை அனுமதி

George   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

அரசாங்க தகவல் திணைக்களத்துக்குப் புறம்பாக, தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

'இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது' என ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த ஊடாகவியலாளர் சந்திப்பு அராசங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றபோது அவர் இதனைக் கூறினார்.

'முழுமையான, நம்பகமாக, சரியான, உத்தியோகப்பூர்வ தகவல்களை பெற்றுக்கொடுப்பதற்கு இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளதுடன் அரச உத்தியோகப்பூர்வ தகவல் வழங்கியாக இது செயற்படும்.

அத்துடன், பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பங்களிப்பு  இந்த நிலையத்தின் ஊடாக அரச கட்டமைப்பினுள் தகவல் சென்றடையும் என்பதுடன் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவலறியும் சட்டமூலத்தை தொடர்ந்து முக்கிய அம்சமாகவும்  இது அமையவுள்ளதாக பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X