2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘தோட்டத் தொழிலாளர்கள் கொழும்பில் போராடத் தடை’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ. ரமேஸ்

தோட்டத் தொழிலாளர்கள், தமது உரிமைகளைக் கோரி, கொழும்பு உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுக்க முயல்வார்களாயின், அதற்கு எதிராக, நீதிமன்றங்களினூடாகத் தடையுத்தரவுகள் ​பெறப்படும். அதையும் மீறி, போராட்டங்களை நடத்துவோருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, பொலிஸார் எச்சரிக்கை விடுத்தனர். 

இது தொடர்பில் தலவாக்கலை மற்றும் ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால், நேற்றுச் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது,  “தொழிலாளர்களின் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபடுவதை நாம் தடுக்கவில்லை .ஆனால், போராட்டம் ஊடாக, நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கான இடையூறுகளைத் தவிர்த்தல் மற்றும் பொது உடமைகளை பாதுகாத்தல் தொடர்பில், சட்ட ஒழுங்குக்கு பாதகத்தன்மை ஏற்படுகின்றமையினால் இந்த தடை உத்தரவு பெறப்பட்டுவருகின்றது. 

ஆனால், இதனைத் தவறாக நினைத்து போராட்டம் செய்பவர்கள், பொலிஸாருக்கு எதிராக கோஷமிடுவதுடன் பொலிஸார் அரசியல் இலாபம் கருதியும் அரசியல்வாதிகளுக்கு துணைபோவதாகவும் தவறாக எண்னுகின்றனர். 

எனவே, பொலிஸார் தாம் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் கடமைகளை சரிவர செய்வதற்கு மக்கள் இடம்கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

“இதேவேளை, எதிர்காலத்தில் சட்ட ஒழுங்குகளுக்கு பாதகம் விளைவிக்கும் போராட்டங்களுக்கு தடை உத்தரவு பெறப்படும். தடை உத்தரவின் ஒழுங்கு விதிகளுக்கு அப்பால் சென்று போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .