Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 14 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தண்ணீர்க் கட்டணம், 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், தின்பண்டங்களின் விலைகளையும் அதிகரிக்க முடியும்” என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
“அரசாங்கமானது, சகல பிரிவுகளுக்கும் வரியை அறவிட்டு, நுகர்வோரை துன்பத்துக்கு உள்ளாக்குகின்றனது. இவ்வாறான நிலையில் தண்ணீர்க் கட்டணமும் அதிகரித்துள்ளது. இது, மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகவே உள்ளது” என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
தண்ணீரானது, நுகர்வோரின் அத்தியாவசியத் சேவையாகும் என்பதுடன் தண்ணீர்க் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் ஹோட்டல் மற்றும் பேக்கரி போன்றவற்றில் விற்பனைச் செய்யப்படுகின்ற சகல பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க முடியும் என்றும் அவ்வியக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையின் செலவை முகாமைத்துவம் செய்வதற்குப் பதிலாக, அந்தச் சபையின் அதிகரித்த செலவை நுகர்வோர் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆத்துடன், தேசிய நீர்வழங்கல் சபையின் செயற்பாட்டு அதிகாரசபையொன்றை நிறுவ வேண்டும் என்றும் அந்த இயக்கம் கோரியுள்ளது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago