2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘தீர்வுக்குப் பின்னரே அத்துமீறினர்’

George   / 2016 நவம்பர் 10 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

“பிரச்சினைக்குத் தீர்வுப் பெற்றுக்கொடுத்த கொஞ்ச நேரத்தில் தான் ஜனாதிபதி செயலகத்துக்குள், அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்துமீறிச் செல்ல முயன்றனர்” எனறு மெகாபொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

“அங்கவீனமடைந்த இராணுவத்தினர் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம், ஞாயிற்றுக்கிழமையும் அழைத்தோம் ஆனால், அவர்கள் வரவில்லை.

திங்கட்கிழமை 1 மணிக்குப் பிறகு வருகிறோம் என்றனர். நாம் மறுப்புத் தெரிவித்தால் அன்றைய தினம் காலையில் பேச்சுவார்தை இடம்பெற்றது. இராணுவ வீரர்களின் உரிமையை பாதுகாப்பும் தேசிய அமைப்பின் உறுப்பினர் உள்ளிட்ட அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினோம்.

அதன்பின்னர், தீர்வுக் காணப்பட்டுவிட்டது அமைதியாக இருங்கள் என ஆர்பாட்டகார்களுக்கு இரண்டு மூன்று தடவைகள் அறிவிக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் முன்னிலையாகியிருந்த பிக்குகளில் இருவர் உள்ளிட்டவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. எனினும், தீர்வுப் பற்றி அறிவித்த பின்புதான், அவர்கள் அத்துமீறி ஜனாதிபதி செயலகத்துக்குச் செல்ல முற்பட்டனர். இது அரசியல் இலாபத்தை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .