2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘தகவலறியும் சட்டமூலம் விரைவில்’

Kogilavani   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.பி.மதன்

“ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் என்ற ரீதியில் எமது நாட்டுக்குள் சுதந்திர ஊடகத்தை பலமிக்கதாக மாற்றி, ஊடகவியலாளர்களுககு தேவையான வசதிகளை செய்துக்கொடுத்து, ஊடகவியலாளர்களை சிறந்தவர்களாக, பரிபூரணமானவர்களான, முழுமையான ஊடகவியலாளர்களாக மாற்றுவதற்குத் தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுச் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 61ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“தகவலறியும் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில், இன்னும் சில மாதங்களில் தேவையான நடவடிக்கை எடுக்க, அரசாங்கம் என்ற ரீதியில் நாம் நடவடிக்கை எடுப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “கடந்த 21 மாத காலப்பகுதியில், அதாவது கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நாட்டின் இடம்பெற்ற மாற்றங்களுடன், ஊடக சுதந்திரத்துடன் எமது பயணத்தைத் தொடர நடவடிக்கை எடுத்திருந்தோம். எமது நாட்டுக்குள் நாம் மேற்கொண்ட இந்த முன்னேற்றம் குறித்து மகிழ்சியடைய முடியும்.

நாட்டைக் கட்டியழுப்பும் காரியத்தில், ஊடகங்களிடம் நாடு எதிர்ப்பார்ப்பது என்ன என்பது குறித்து அவதானம் செலுத்துவோம். அச்சு ஊடகமாக இருக்கட்டும், இலத்திரனியல் ஊடகமாக இருக்கட்டும், இவைகள் தான் மக்களின் கண், காது, உள்ளிட்ட உணர்வுகள் போல காணப்படுகின்றன.

காலையில், வீட்டில் உறக்கத்தில் இருந்து எழும்பும் மக்களுக்கு, நாட்டை கட்டியெழுப்பத் தேவையான தகவல்கல்கள் தான், ஊடகங்கள் ஊடாகத் தேவை. சூரிய உதயத்துடன் தேசப்பற்று, தமது நாட்டுத் தொடர்பான தமது பொறுப்புத் தொடர்பில், நாட்டில் உள்ள சகல மக்களுக்கும் ஊடகங்கள் அறிவுறுத்த வேண்டும்.

ஆனால், இன்று சில நேரங்களில் நாம் வருத்தப்பட  வேண்டிய நிலை உள்ளது. காலையில் ஊடகங்களில் பிரதான செய்திகளான சண்டை, மதவாதம், இனவாதம், நாசச் செயல்கள்  உள்ளிட்டவையே காணக்கூடியதாக உள்ளது. நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், இந்த நாட்டில் ஊடகங்களின் நிலை என்ன என்பது குறித்து உங்களுக்குத் தெரியும். பத்திரிகை ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டனர். ஊடகவியலாளர்களின் வீட்டுக்குச் சென்று கொலை செய்ததுடன்,  அச்சுறுத்தும் சம்பவங்களும் இடம்பெற்றமை உங்களுக்கு தெரியும். இவை அனைத்தையும் நாம் இன்று முடிவுக்கு கொண்டு வந்து, அந்த இருண்ட யுகத்தை ஒழித்துள்ளோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .