2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

4 1/2 நாட்களுக்கு ஒருமுறை ஓர் ஊடகவியலாளர் பலி

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில், நான்கரை நாட்களுக்கொரு முறை, ஓர் ஊடகவியலாளர் கொல்லப்படுகிறார் என, யுனெஸ்கோ அமைப்பினால் நேற்றுப் புதன்கிழமை வெளியிடப்பட்ட அதிர்ச்சிகரமான அறிக்கை தெரிவிக்கிறது. 

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படாமலிருப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம், நேற்று (நவம்பர் 2) அனுஷ்டிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே, மேற்படி விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தால், எதிர்வரும் 17ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் சுருக்கிய வடிவமே, இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, கடந்த 10 ஆண்டுகளில், பணியிலீடுபட்டுக் கொண்டிருந்த 827 ஊடகவியலாளர்களின் கொலைகள், யுனெஸ்கோவினால் பதியப்பட்டுள்ளன. 

ஊடகவியலாளரின் கொலைகள் தொடர்பாக அதிக கவனம் காணப்படுகின்ற போதிலும், 10 கொலைகளில் ஒன்றுக்கு மாத்திரமே, நீதி கிடைப்பதாகவும், பெரும்பாலான தருணங்களில், குறித்த கொலைகள் தொடர்பாக யுனெஸ்கோவினால் கேட்கப்படும் தகவல்களைக் கூட, அந்நாடுகள் வெளிப்படுத்துவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

2006ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், பெரும்பாலான கொலைகள், அரேபியத் தேசங்கள் இடம்பெற்றுள்ளன. கொல்லப்படுபவர்களில் பெண்களை விட ஆண்கள், 10 மடங்கு அதிகமாகக் காணப்படுகின்றனர் எனவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .