2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘நெரிசலுக்கு தீர்வின்றேல் 15 முதல் வேலைநிறுத்தம்’

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலும் ஏனைய பிரதான வீதிகளிலும் காணப்படும் வாகன நெரிசலுக்குத் தீர்வு காணவில்லை எனின், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் கொழும்பு உள்ளிட்ட 30 பிரதான வீதிகளில் வேலைநிறுத்தத்தில் குதிக்கப்போவதாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

  இந்த விவகாரம் தொடர்பில் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில், 

“வாகன நெரிசல் தொடர்பில், கூடுதல் கவனம் செலுத்துமாறு, அரசாங்கத்தின் கவனத்துக்கு, நாங்கள் ஏற்கெனவே கொண்டுவந்துவிட்டோம். வாகன நெரிசல் காரணமாக தனியார் பஸ் தொழில் துறையை கொண்டு நடத்துவதில், பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. அதிகூடிய வாகன நெரிசல் காரணமாக, 10 கிலோமீற்றர் தூரத்தைக் கடப்பதற்கு ஒன்றரை மணித்தியாலத்துக்கு மேல் எடுக்கின்றது. இதனால், பயணிகளும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். எரிபொருளும் வீண்விரயமாகிறது. நாளொன்றுக்கு 2,000 ரூபாயை இழக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .