2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘நிலுவை தேவையில்லை’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி. நிரோஷினி

ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடும் போது, நிலுவையிலுள்ள சம்பளத் தொகையை உடனடியாக பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் இல்லையேல், போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தே, இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.  

ஆரம்ப காலத்தில், கூட்டு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடும்போது, நான்கு மாதங்களுக்கான நிலுவையிலுள்ள சம்பளத் தொகை பெற்றுக்கொடுக்கப்பட்டது.  

ஆனால் இம்முறை, அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் வடிவேல்  சுரே​ஷை செயலாளராகக் கொண்ட இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவரும், சம்பள நிலுவை தேவையில்லை எனக் கூறி, ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.  

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆறுமுகம் தொண்டமான், “இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எது எவ்வாறாயினும், சம்பள நிலுவையை விரைவில் பெற்றுக்கொடுப்போம்” எனக் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .