2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘நல்லாட்சியை கவிழ்க்க முடியாது’

Gavitha   / 2017 ஜனவரி 02 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, ஜோக்கராக மாறியுள்ளார். இந்த நல்லாட்சி அரசாங்கத்தைப் பிரிக்கப் போவதாக அவர் கூறி வருகின்ற போதிலும், அது ஒருபோதும் இயலாத காரியமாகும்” என்று, பொது நிர்வாக மற்றும் முகாமைத்தவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.  

மொனராகலையில், நேற்று (01) இடம்​பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், “தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்க, எவராலும் முடியாது. 2017ஆம் ஆண்டு என்பது, இந்த அரசாங்கத்துக்கு முக்கியமானதும் சிறந்ததுமான ஆண்டாகும்” என்றார்.  

அத்துடன், “தேசிய அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்தில் 160 ஆசனங்கள் உள்ளன. அதனை ஒருவராலும் அசைத்துவிட முடியாது என்று” அவர் மேலும் கூறினார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .