2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘பெண் பாலியல் தொழிலாளர்கள் 14,130 பேர் உள்ளனர்’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

இலங்கையில் பெண் பாலியல் தொழிலாளர்கள் 14,130 பேர் உள்ளனர் என்று தெரிவித்த சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ பிரதியமைச்சர் பைசால் காசிம், எச்.ஐ.வி மற்றும் சமூக நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், ‘ஆணுறை’ (கொண்டம்) குறித்தும் அறிவுறுத்தப்படுகின்றது என்றும் கூறினார்.  

நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஐ.தே.க எம்.பியான புத்திக பத்திரண கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். 

பிரதியமைச்சர், தொடர்ந்து பதிலளிக்கையில், “இலங்கையில் பெண் பாலியல் தொழிலாளர்கள் பற்றிய தொகை மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் 14,130 பெண் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்” என்றார். 

“2015ஆம் ஆண்டின் இறுதியளவில், எச்.ஐ.வி தொற்றுடன் வாழ்ந்த மற்றும் வேறு சமூக நோய்களுக்கு ஆளாகியிருந்த பெண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 1630 ஆகும்” என்று பிரதியமைச்சர், குறிப்பிட்டார்.  

“எச்.ஐ.வி மற்றும் சமூக நோய்கள், பெண் பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் பரவுவதை தடுப்பதற்கு, சமூக நோய்கள் தொடர்பில் அறிவுறுத்தப்படுவதுடன், ‘ஆணுறை’ (கொண்டம்) அல்லது பெண்ணுறை தொடர்பில் அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .