2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘புதிய சரத்து’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் தொடர்பாக நேற்றுக் கைச்சாத்திடப்பட்ட கூட்டொப்பந்தத்தில், தோட்டக் கம்பனிகளுக்குக் கெடுபிடியாக அமையும் வகையில், புதிய சரத்தொன்று உள்வாங்கப் பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. 

தோட்டங்களை, கம்பனிகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் ​தொழிலாளர்கள் வேலை செய்யக் கூடிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தோட்டங்கள் இருக்க வேண்டும் எனவும், அந்த புதிய சரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.  

மேற்கூறப்பட்ட நிபந்தனைகளை மீறும் கம்பனிகளுக்கு எதிராக, நீதிமன்றம் செல்லக்கூடிய வகையிலேயே, இந்தச் சரத்து, மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளது என, இ.தொ.கா தெரிவித்துள்ளது. 

இதேவேளை, தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களைச் சுத்தப்படுத்தி, அவற்றை தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய வகையில் மாற்றியமைத்துக்கொடுக்க, கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதில் மேலும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .